30.5 C
Chennai
Sunday, Jun 30, 2024
maxresdefault 1
ஆரோக்கியம் குறிப்புகள்

கோடைக்காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் சில எளிய வழிகள்…..

கோடைக்காலத்தில் உடம்பு எப்போழுதுமே சூடாகவே காணப்படும்.

இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும்.

இதன் காரணமாக தலைவலி முதல் முகப்பரு, போன்றவை வரை பலவற்றை சந்திக்கக்கூடும்.

இதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள முறைகளை பயன்படுத்தினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • உடலில் நீர்ச்சத்து குறைவதால் உடலின் வெப்பநிலையும் அதிகரிக்கும். எனவே இக்காலத்தில் தண்ணீரை அதிக அளவில் குடித்து வந்தால், அவை உடல் சூட்டைத் தணிக்கும்.
  • கோடையில் அதிகம் கிடைக்கும் முலாம் பழத்தை வாங்கி, அதனை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும், பொட்டாசியமும், கோடை பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். கோடையில் ஏற்படும் உடல் சூட்டைத் தணிக்கும்.
  • ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. எனவே 2 கப் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.
  • 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது அதன் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அப்படியே வாயில் போட்டு விழுங்க வேண்டும். இதனாலும் உடல் வெப்பம் குறையும்.
  • கோடையில் எப்போதும் அளவான காரம் கொண்ட உணவுகளை உட்கொண்டு வர வேண்டும்.
  • இளநீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.
  • 2 டேபிள் ஸ்பூன் பார்லியை 2 கப் நீரில் போட்டு நன்கு 1/2 மணிநேரம் கொதிக்க விட்டு, அதனை இறக்கி குளிர வைத்து, பின் அதனை நாள் முழுவதும் சீரான இடைவெளியில் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.
  • சந்தனம் மற்றும் மூல்தானி மெட்டி இரண்டிற்குமே உடல் வெப்பத்தை தணிக்கும் திறன் உள்ளது. எனவே இவற்றில் பால் சேர்த்து, அவ்வப்போது முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், உடல் வெப்பம் குறையும்.
  • சீரகத்தை நீரில் போட்டு காய்ச்சி, பின் அந்த நீரை வடிகட்டி, நாள் முழுவதும் குடித்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.
  • தினமும் காலையில் எழுந்ததும் பிராணயாமம் என்னும் யோகாவை செய்து வந்தால், உடல் வெப்பம் குறையும்.maxresdefault 1

Related posts

உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

கொஞ்சம் குண்டா இருக்கீங்களா?ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பிருக்கு… ஜாக்கிரதை…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்கள் திருமண மோதிரத்தை இடது கையில் மட்டும் அணிவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

nathan

நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். அவ்வபோது மருதாணி வைத்துக்கொள்வதால் என்ன பயன்கள்…?

nathan

தெரிஞ்சிக்கங்க…நாம் சாப்பிடும் உணவை வேகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

இதில் உங்க ராசி இருக்கா? மிகப் பெரிய செல்வந்தராகும் யோகம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு இருக்கு!

nathan

தூசி எரிச்சலை ஏற்படுத்துமா? கட்டுப்படுத்த எளிய குறிப்புகள்

nathan

ஹெல்த் ஸ்பெஷல் செம்பருத்தி பூவை தேநீர் செய்து குடிப்பதால் உண்டாகும் ஆரோக்கிய பலன்கள்..!!

nathan