31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

நாட்டு மருத்துவத்தில் நோய்களுக்கான தீர்வுகள் . சூப்பர் டிப்ஸ்….

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடிசெய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். * சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. * வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும்.

மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். * புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். * கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். * சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம். * முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். இருமல், தொண்டை கரகரப்பு பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

Related posts

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

nathan

பல் எந்த விதத்தில் நாம் பராமரிக்காததால் நம்முடைய உள்ளுறுப்புகளை பாதிக்கும்….

sangika

உஷார் மக்களே! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்!

nathan

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தணுமா?

nathan

உண்மையான காரணம் மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது..

nathan

பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால்

nathan

தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது…?

nathan

சைக்கிள் ஓட்டும்போது நாம் செய்யும் தவறுகள்!

nathan