பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின்களால் சில நேரம் அரிப்புகள் ஏற்படுவது உண்டு. இந்த சமயத்தில் போது இடங்களுக்கு செல்ல நேரும் பட்சத்தில் பெரும் துயருக்கு ஆளாக நேரிடும். இந்த நேரத்தில் அரிப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக ஈரப்பசை உள்ளது.
இந்த ஈரப்பசையானது தொடைகளில் உரசுவதன் மூலமாக அரிப்புகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு அடிக்கடி நாப்கினை மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அடிக்கடி மாற்றியும் அரிப்புகள் தொடர்ந்து ஏற்படும் பட்சத்தில்., கீழ்காணும் இயற்கை மேற்கொள்வதன் மூலமாக சரி செய்ய இயலும்.
ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து கொண்டு பஞ்சின் உதவியுடன் சிறிதளவு நனைத்து., அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் நாளொன்றுக்கு மூன்று முறை தடவி வரும் பட்சத்தில் அரிப்பு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
ஐஸ் கட்டிகளை சிறிதளவு எடுத்து கொண்டு துணியில் கட்டி கொண்டு., தொடை பகுதியில் ஒத்தனம் வைத்து கொண்டால் எரிச்சல் குறையும்.
தினமும் குளித்து முடித்த பின்னர் பஞ்சை டீ-ட்ரீ எண்ணையில் நனைத்து., எரிச்சல் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் எரிச்சல் பிரச்சனை விரைவில் குணமாகும்.
பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றி., வேப்ப மரத்தின் இலைகளை நன்கு கொதிக்க வைத்து பின்னர் அந்த நீர் குளிர்ந்தவுடன் எரிச்சல் உள்ள இடத்தில் ஊற்றி கழுவி வந்தால் எரிச்சல் குணமாகும் மற்றும் எரிச்சலால் ஏதேனும் நோய் தொற்றுகள் உருவாகாமல் பார்த்து கொள்ளும்.
எரிச்சல் உள்ள இடத்தில் நன்றாக சுத்தம் செய்து விட்டு., தேங்காய் எண்ணையை தடவி காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு சிறுதளவு தயிரை தடவி சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவினால் எரிச்சல் குணமாகும். தயிரை தினமும் மூன்று முறை தடவி வந்தால் எரிச்சல் பிரச்சனை விரைவில் குணமாகும்.
கொத்தமல்லி இலைகளை நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து., எரிச்சல் உள்ள இடத்தில் கொத்தமல்லி பேஸ்டை தடவி சுமார் 20 நிமி. கழித்த பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் எரிச்சல் குணமாகும். கற்றாழையில் இருக்கும் ஜெல்லை., எரிச்சல் உள்ள இடத்தில் நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று ம