31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அறுசுவைசமையல் குறிப்புகள்

ருசியான முட்டை சப்பாத்தி எப்படி செய்வது?…

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 5

முட்டை – 4
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பெ.வெங்காயம் – 3
சீரகம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.

Related posts

சூப்பரான சேமியா வெஜிடபிள் இட்லி

nathan

காளான் பெப்பர் ப்ரை

nathan

பிரட் முட்டை உப்புமா எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

nathan

சுவையான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல்

nathan

எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட்

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

சளிக்கு இதமான… மிளகு பூண்டு குழம்பு

nathan

சுவையான சேமியா உப்புமா

nathan

கத்திரிக்காய் கார குழம்பு

nathan