நீண்ட ஆயுள் பெற விரும்புவர்கள் காபி குடித்தால் போதும் என சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 38 வயது முதல் 73 வயது வரை உடையோரின் உடலில் காபி குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி ஆய்வு ஒன்றை நடத்தினர்.
இந்த ஆய்வின் முடிவில் ஆச்சரிய மூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்படி, தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் 12 சதவீதம் குறைவான இறப்பு விகித்தை கொண்டிருக்கின்றனர்.
கடந்த வருடம் ஸ்பெயினைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தினந்தோறும் குறைந்த பட்சம் நான்கு கோப்பைகள் காபி குடிப்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மரணத்தை சந்திக்க 64 சதவீதம் குறைவான வாய்ப்புகளை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவு காபி பிரியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.