27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
arukampull
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற…

அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது.

அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு.

ஊட்டச்சத்து

அறுகம்புல்லை சேகரித்து நீரில் கழுவி நைய அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லுமுன் சாப்பிட்டு வந்தால் பலவினமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும்.

வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையைக் கையாளலாம்.

arukampull

உடல் பலவீனத்தைப் போக்க

அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டானிக் ஆகச் செயற்படுகின்றது.

இதயநோய்க்கு

அறுகம்புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதயநோய்க்கு இதமளிக்கும்.

உதிரப் போக்குக்கு

திடீரென ஏற்படும் வெட்டு, காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும், அறுகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக் கட்டினால் உதிரப் போக்கு உடனடியாக நின்றுவிடும்.

காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

ஒரு பிடி அருகம்புல், மிளகு 10, சீரகம் சிறிதளவு சேர்த்து அரைத்து பாலில் கலந்து குடிக்க, உடலில் சேர்ந்துள்ள மருந்துகளின் நஞ்சினை அது போக்கிவிடும்.

மருந்தாக

அறுகம்புல் ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து.

குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது.

இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

Related posts

வெயில் காலத்தில் உளுந்து சாப்பிடலாமா?

nathan

இப்படி தூங்கினால் அப்படி இருப்பீர்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பெயரின் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் தொடையில் ஒரு கவனம் தேவை

nathan

தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை சிறுநீரில் கல் வர காரணங்கள்,,,

nathan

கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு உணவு முறை!…

nathan

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்

nathan

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இதை செய்யுங்கள்!

nathan