36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிப்பதில் பழங்கள், காய்கறிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனினும் ஒருசில வகை காய்கறி, பழ வகைகளில் சர்க்கரை அளவும், ஸ்டார்ச் அளவும் அதிகம் இருக்கின்றன. அதனால் நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமின்றி தமக்கும் அத்தகைய பாதிப்பு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிறைய பேர் காய்கறி, பழ வகைகளை சாப்பிட தயங்குகிறார்கள். சர்க்கரை பாதிப்பு இல்லாததுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும் காய்கறி, பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

* தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.

* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.

* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.

* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.

Related posts

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடலாமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இது ஈசியான மருந்து..!

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan

அதிகமாக மாம்பழங்களை சாப்பிட்டால் என்ன நடக்கும்?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களது “மூட்”-ஐ உடனடியாக அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

வெள்ளை சக்கரையில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

nathan

உடல் எடையை கடகடவென குறைக்க வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

sangika

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

nathan