சீமை மாதுளை எனும் பழத்தின் மூலம், உடல் எடையை விரைவாக குறைப்பது உள்ளிட்ட பல நன்மைகள் கிடைப்பது குறித்து இங்கு காண்போம்.
சீமை மாதுளை மஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின்கள் A, B, C, நார்ச்சத்துக்கள், தாதுக்கள், காப்பர், ஜின்க், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் அடங்கியுள்ளன.
உடல் எடையை குறைத்தல்
நமது டயட் பட்டியலில் சீமை மாதுளையை சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். இந்த பழம் வெறும் 57 கலோரிகளை மட்டுமே கொண்டதாகும்.
வயதாவதை தடுத்தல்
சீமை மாதுளையில் உள்ள எண்ணற்ற ஆண்டி ஆக்சிடண்ட்கள், நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வு அளிக்கும். இதனால் விரைவில் வயதாகாமல் தடுக்கப்படும். அத்துடன் இதயம் சார்ந்த நோய்களையும் தடுக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றுதல்
இந்த பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைக்கப்படும்.
சீமை மாதுளையை சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள், கண் நோய்கள், வீக்கம், வறண்ட தொண்டை ஆகிய பிரச்சனைகள் சரி செய்யப்படும்.
குடல் புண்
அல்சர் எனும் குடல் புண்களை சரி செய்ய சீமை மாதுளை பழத்தை சாப்பிட்டு வர வேண்டும். இதன்மூலம் அல்சர் விரைவில் குணமடைந்து விடும்.
புற்றுநோயை தடுத்தல்
புற்றுநோய் செல்கள் உருவாவதை சீமை மாதுளை பழம் தடுக்கும். இதில் உள்ள டானின் எனும் மூலப்பொருள், குடலில் உருவாகும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செய்வதுடன், குடல் பகுதியில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும்.
மலச்சிக்கலை குணப்படுத்துதல்
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். இந்த பிரச்சனை உள்ளவர்கள், சீமை மாதுளை பழத்தின் சாற்றை தேனுடன் கலந்து குடித்து வர விரைவில் குணமடையும்.
வீக்கத்தை குறைத்தல்
சீமை மாதுளையில் உள்ள வைட்டமின் சி குடல் வீக்கம், சரும வீக்கம், ஒவ்வாமை, சொறி ஆகியவற்றை குணப்படுத்தும். மேலும் வாந்தி, பேதி போன்றவற்றையும் இந்தப் பழம் சரிசெய்யும்.
சுவாச பிரச்சனை
சுவாசக் கோளாறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சீமை மாதுளை பழத்தை சாப்பிட வேண்டும். மேலும் இதன் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தொண்டை வறட்சி, ஆஸ்துமா, ரத்த சோகை போன்ற பிரச்சனைகளையும் சரிசெய்யும். அத்துடன் காசநோயாளிகளுக்கு இந்த பழம் சிறந்த மருந்தாக இருக்கும்.
மன அழுத்தம்
சீமை மாதுளையை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகும். எனவே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கப்படும். மேலும் அடிக்கடி ஏற்படும் மன அழுத்தமும் விரைவில் குறைந்துவிடும்.