28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
538369737
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

இன்று பலருக்கும் முகத்தில் பல வித பிரச்சினைகள் உள்ளன. இதனை சரி செய்ய அதிக அளவில் பணத்தை செலவிடுகின்றனர். ஆனால், பணத்தை இந்த அளவிற்கு வாரி வழங்காமல் எளிதாக உங்கள் முகத்தை அழகு செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும்.

குறிப்பாக வீட்டில் உள்ள பழங்களே இதற்கு போதும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மாம்பழம் உங்களுக்கு சிறந்த முறையில் பயன்படுகிறது. மாம்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்கள் மறையும் என்பதை இனி இந்த பதிவில் அறிவோம்.

மாம்பழ பிரியர்கள்..! மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டவுடனே நம் நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்றுதான். அது மாம்பழத்தின் சுவை மட்டும் தான். உண்மைதாங்க… மாம்பழம் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் மாம்பழம் என்றால் அதிக பிரியமே.

முகத்தை பொலிவு செய்யும் பழம்..! முக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஒரு சில முக்கிய பழங்கள் உதவும். அந்த வகையில் இந்த மாம்பழம் முக்கிய இடத்தில் உள்ளது. மாம்பழத்தில் உள்ள சத்துக்களே முக அழகை பாதுகாக்கிறது. இவற்றின் ஊட்டசத்துக்கள் இவையே…

புரதசத்து வைட்டமின் எ வைட்டமின் பி6 ஃபோலேட் வைட்டமின் சி நார்சத்து நீர்சத்து

வெண்மையான முகத்திற்கு கருமையாக உள்ள உங்கள் முகம் வெண்மையாக மாற வேண்டும் என்றால், அதற்கு இந்த மாம்பழம் ஒன்றே போதும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி முகத்தை பொலிவாக மாற்றும்.

தேவையானவை :- முல்தானி மட்டி 3 ஸ்பூன் பழுத்த மாம்பழம் பாதி யோகர்ட் 1 ஸ்பூன்

செய்முறை :- முகத்தை வெண்மையாக மாற்ற முதலில் மாம்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதன் சாற்றை யோகர்டுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் முல்தானி மட்டியை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.

கரும்புள்ளிகளை நீக்க… முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ஒரு எளிய வழி உள்ளது. அதற்கு மாம்பழ சாற்றை தேனுடன் நன்கு கலந்து கொண்டு பிறகு இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும், முகம் பார்ப்பதற்கு மென்மையாகவும் எருக்கம்.

சுருக்கங்கள் மறைய முகத்தின் இளைமையை மறைப்பதே இந்த சுருக்கங்கள் தான். இது பலரின் முகத்தின் அழகை கெடுத்து வருகிறது தான். முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :- முட்டை வெள்ளை கரு 1 மாம்பழ சாறு 2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொண்டு, அவற்றுடன் மாம்பழ சாற்றையும் சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து, வறண்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் சுருக்கங்கள்.

மின்னுகிற முகத்தை பெற உங்கள் முகம் பளபளவென மின்ன வேண்டுமா..? அதற்காக இனி கிரீம்களை வாங்கி காசை செலவிடாதீர்கள். இந்த குறிப்பை உபயோகித்து பாருங்கள்.

தேவையானவை :- மாம்பழ சாறு 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் கோதுமை மாவு 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :- முதலில் மாம்பழ சாறுடன் தேனை நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றை கோதுமை மாவில் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினு வென மின்னுமாம். மேலும், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

538369737

Related posts

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்!…

sangika

கருப்பான பெண்கள் நிறமாக மாற

nathan

சோப்புகளின்றி முகத்தை எப்படியெல்லாம் சுத்தம் செய்யலாம் எனத் தெரியுமா?

nathan

ஜொலிக்கும் சருமத்தி‌ற்கான‌ ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகள்

nathan

அழகு குறிப்புகள்:மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!

nathan

வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து பிளாக் ஹெட்ஸை போக்க டிப்ஸ்!………

nathan

முகத்திற்கு ஃபேஷியல் ஏன் அவசியம்?

nathan

சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்

sangika

‘பளீச்’ஜொலிப்புக்கு வீட்டிலேயே தீர்வு

nathan