32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…?

எப்படிப்பட்ட காளானை சாப்பிடக்கூடாது: காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்கவும்.

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்றுநாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதி அளவுஎடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியைஉபயோகப்படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்துவிடும்.

ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

Related posts

இரத்தத்தில் இருக்கும் கொழுப்பையே நொடியில் அடித்து விரட்டும் அற்புத சூப்!அற்புதமான எளிய தீர்வு

nathan

குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க இத செய்யுங்கள்!…

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வயதானவராக மாற்ற கூடிய அன்றாட பழக்க வழக்கங்கள்…!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ஜூஸ் -அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

எலுமிச்சை தேநீர் ஆரோக்கிய நன்மை

nathan

அஜீரணத்தை போக்கும் கருஞ்சீரகம் சாதம்

nathan

ஒரே வாரத்தில் எடையை இரு மடங்கு வேகமாக குறைக்கும் அற்புத ஜூஸ்!

nathan

சூப்பர் டிப்ஸ் அதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா….?

nathan

சுடுநீரில் கிராம்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan