தேவையான பொருட்கள்:
பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை – 2 கப்
பால் பவுடர் – 1 கப்
மைதா – 1/2 கப்
சமையல் சோடா – 1 சிட்டிகை
உருக்கிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
ஏலக்காய் – 2 தூள் செய்தது
செய்முறை:
சர்க்கரை பாகு: சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும். நன்கு கொதித்து பாகுபதம் (ஜீரா) வந்ததும் இறக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான அளவு பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு உருண்டையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். குலாப் ஜாமூன் மெதுவாக அடியிலிருந்து மேலே வரவேண்டும். பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும். குலாப் ஜாமுனை 2 மணி நேரம் சர்க்கரைப் பாகிலேயே விட்டுவிடவும். பிறகு எடுத்து பரிமாறலாம். ருசியான குலாப் ஜாமூன் தயார்.