27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
7
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம்
பாதாமில் வைட்டமின்கள் மற்றும் இதர அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு கையளவு பாதாமை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைத்து, அடிக்கடி பசி வராமல் இருக்கும். முக்கியமாக உப்பு சேர்த்த பாதாமை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள்
ஒரு ஆப்பிளில் 4-5 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை டயட்டில் இருப்போர் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்பட்டு, கொழுப்புக்கள் சேராமல், உடல் எடை குறையும்.

அவகேடோ
அவகேடோவில் கொழுப்புக்கள் இருந்தாலும், அவை ஆரோக்கியமான கொழுப்புக்கள் தான். மேலும் அதில் நார்ச்சத்துக்களும், புரோட்டீனும் அதிகம் இருப்பதால், அவை உடல் எடையைக் குறைக்க உதவும். குறிப்பாக இதில் உள்ள கொழுப்புக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

குடைமிளகாய்
குடைமிளகாயில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வெரைட்டிகள் உள்ளன. இவை அனைத்திலுமே வைட்டமின் சி மற்றும் வேறுசில வைட்டமின்களும் போதிய அளவில் நிறைந்துள்ளன. இத்தகையதை சாலட் அல்லது சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

பட்டை
காபி, டீ போன்றவற்றில் சர்க்கரைக்கு பதிலாக பட்டைத் தூளை ஒரு சிட்டிகை சேர்த்து கலந்து குடித்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, இன்சுலினானது மெதுவாக வெளியேற்றப்படும். மேலும் இதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை காலை வேளையில் சாப்பிட்டு வாருங்கள்.

தினை
மதியம் அல்லது இரவு வேளையில் தானியங்களில் ஒன்றான தினையை உட்கொண்டு வந்தால், அவை சாதத்திற்கு சிறந்த மாற்றாக விளங்கும். மேலும் இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினையை உணவில் சேர்த்து வாருங்கள்.

Related posts

சுவையான வாழைப்பழ பிரட் ரெசிபி

nathan

வறுத்து அரைச்ச முட்டை குழம்பு -கேரளா ஸ்டைல்

nathan

பருத்தி பால் தீமைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இட்லி மாவுக்குள் இத்தனை மர்மங்களா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்

nathan

மிளகு தூளுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுங்க:சூப்பர் டிப்ஸ்

nathan

நெருஞ்சில் பொடி – nerunjil powder benefits in tamil

nathan

ருசியான வித்தியாசமான தேங்காய் பிஷ் பிரை!! சுவையாக செய்வது எப்படி!!

nathan

அதிக எடை உள்ளவர்களின் எடை குறைய கடலை மிட்டாய்…..

sangika