30.3 C
Chennai
Tuesday, Jul 14, 2026
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்..

நாம் அனைவருமே அழகான, இளமையான தோற்றம் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களே! இல்லை என மறுத்தாலும் நம் அடிமனதில் இந்த ஆசை கண்டிப்பாக ஒட்டிக்கொண்டு தான் இருக்கும்..! எனவே, அனைவரும் அழகாக இளமையாக இருக்க உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இங்கு படித்தறிவோம்..!

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சையில் வைட்டமின் ‘சி’ நிறைந்திருக்கிறது. எனவே இந்தப் பழங்களைச் சாப்பிட்டால் இவற்றில் உள்ள வைட்டமின் ‘சி’, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

நீர்ச்சத்து நிறைந்துள்ள இந்தப் பழங்களில் லைகோபீன் அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் சாப்பிட, வெயிலினால் பாதிப்படைந்த சருமச் செல்கள் அனைத்தும் குளிர்ச்சியடைந்து, சருமம் அழகாகும்.

தக்காளியில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் முதுமைக் கோடுகளையும் தடுக்கும் லைகோபீன் அதிகமாக இருக்கிறது. எனவே இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சருமத்துக்கு ‘மாஸ்க்’ போல தடவிப் பயன்படுத்தலாம்.

நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் நன்கு பொலிவு பெறும். அதிலும் குறிப்பாக, வைட்டமின் சி, ஏ, ஈ, லைகோபீன், லுட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், முதுமை வயதிலும், சற்று இளமையுடனேயே இருக்கலாம்.

Related posts

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வேப்பம்பூ சூப்

nathan

பாதாமில் எத்தனை ஆயுர்வேத நன்மைகள் உள்ளன?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு பால் பிடிக்காதா? இதோ பாலுக்கு இணையான சில உணவுப் பொருட்கள்!!!

nathan

தேனில் ஊற வைத்து நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

அன்றாடம் தானியங்களை சாப்பிடுவதற்கான சில அற்புத வழிகள்!!!

nathan

is pomegranate good for pregnancy ? கர்ப்பத்திற்கு மாதுளை நல்லதா ?

nathan

அசைப்பிரியரா நீங்கள்? கண்டிப்பாக படிக்கவும்

nathan

உங்களுக்கு தெரியுமா தலைசுற்றலை நீக்கும் ஏலக்காய்…!!!!எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமையா? தெரிஞ்சிக்கங்க…

nathan