29.4 C
Chennai
Wednesday, Jun 26, 2024
201702230147527454 Fiche tovalai flower market an increase of Rs 200 per kg SECVPF
மருத்துவ குறிப்பு

இத்தனை நாளா இது தெரியாம போச்சே முல்லையில் இவ்வளவு சிறப்பா?

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.

அந்தவகையில், பொடுகை போக்க கூடியதும், காய்ச்சலுக்கு மருந்தாக விளங்குவதும், வயிறு மற்றும் வாய் புண்களை குணமாக்கவல்லதும், பாதவெடிப்பு, சேற்று புண்களை சரிசெய்யும் தன்மை உடையதுமான முல்லையின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

பல்வேறு நன்மைகளை உடைய முல்லை, மல்லிகை இனத்தை சேர்ந்தது. நல்ல மணத்தை தரக்கூடியது. தூக்கத்தை தூண்ட கூடியதாகிறது. வலி நிவாரணியாக விளங்குகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் அற்புத மருந்தாகிறது.

முல்லை செடியின் இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
முல்லை இலை , சீரகம் , பனங்கற்கண்டு

செய்முறை:
முல்லை இலை சுமார் 15 எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல் சரியாகிறது. வயிறு மற்றும் வாய் புண்களை குணப்படுத்துகிறது. வயிறு வலியை போக்குகிறது. வாயுவை வெளியேற்றுகிறது.
முல்லை பூக்களை கொண்டு பொடுகை சரிசெய்யும் தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
முல்லைப்பூ , தேங்காய் எண்ணெய் ,

செய்முறை:
முல்லை பூக்களை நீர்விடாமல் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். மணமுள்ள தைலமான இதை வடிகட்டி தலைக்கு தடவிவர பொடுகு இல்லாமல் போகும். தலையில் ஏற்படும் அரிப்பு, முடி உதிர்வு போன்றவை மாறும். முடியில் ஏற்படும் தொற்றுகள் சரியாகும்.

முல்லை இலையை பயன்படுத்தி படர்தாமரை, பாதவெடிப்பு, சேற்று புண்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
முல்லை இலை , விளக்கெண்ணெய் , மஞ்சள் பொடி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன், நீர்விடாமல் அரைத்து வைத்திருக்கும் முல்லை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். பின்னர் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு பூசிவர படர்தாமரை, பாதவெடிப்பு, சேற்றுப்புண்கள், சொரி, சிரங்கு குணமாகும். தோல் நோய்களை இல்லாமல் செய்யும்.

தொப்பையை குறைக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை வெங்காயம் , நல்லெண்ணெய்
தொப்பை பிரச்னைக்கு வெள்ளை வெங்காயம் அற்புதமான மருந்தாகிறது. காரச்சுவை, அதிக நீர்ச்சத்து உடைய வெள்ளை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக்கி நல்லெண்ணெயில் வதக்கி, சூடாக சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டுவர நாளடைவில் தொப்பை குறையும். வாயு விலகிப்போகும்.201702230147527454 Fiche tovalai flower market an increase of Rs 200 per kg SECVPF

Related posts

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை!!

nathan

சூப்பர் டிப்ஸ் உடலில் தேங்கி இருக்கும் சளியை உடனே அகற்ற பூண்டை எப்படி உட்கொள்ள வேண்டும்?

nathan

நிறங்களைக் கண்டுபிடிப்பதில் குறைபாடு

nathan

உங்களுக்கு தெரியுமா ஈறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் சில பழங்கால வழிகள்!

nathan

வீடுகளில் பாதுகாப்பிற்கு உதவும் பயோமெட்ரிக் கருவிகள்

nathan

ஆரோக்கியத்தில் மலத்தின் பங்கினை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

கல்லீரலை பலப்படுத்தும் சீரகம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா?

nathan