30 C
Chennai
Saturday, Jul 11, 2026
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் ! கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் என்பது மறக்க முடியாது இனிமையான காலம். இக்காலத்தில் எவ்வளவு தான் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தாலும், அவை அனைத்துமே சுகமான வலிகளே. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இக்காலத்தில் கர்ப்பிணிகள் மனதளவில் அதிகமாக கஷ்டப்பட்டாலும் அது சிசுவை உடனே பாதிக்கும். அதுமட்டுமின்றி, உணவுகளில் கவனமாக இல்லாதது, சரியான நேரத்தில் மருத்துவரை அணுகாதது போன்றவைகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும். மேலும் வேலை செய்யும் அலுவலகங்களில் ஏதேனும் கெமிக்கலை சுவாசிக்க நேர்ந்தாலும், அதுவும் கருவை பாதிக்கும். மேலும் கடந்த சில வருடங்களாக கருச்சிதைவு ஏற்படுவது அதிகரித்துள்ளது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகளைக் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்தால், கருச்சிதைவைத் தடுக்கலாம்.

வெப்பத்தை தூண்டும் உணவுகள்

உடலின் வெப்பத்தைத் தூண்டும் உணவுகளான பச்சை பேரிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் அளவுக்கு அதிகமான குங்குமப்பூ எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் வெப்பமானது தூண்டப்பட்டு, கருச்சிதைவு ஏற்படக்கூடும்.

பயணங்களை தவிர்க்கவும்

கர்ப்ப காலத்தில் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் கரு சரியாக கருப்பையில் சேராமல் இருப்பதால், இக்காலத்தில் பயணங்களை மேற்கொண்டால், அது எளிதில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். வேலைக்கு செல்லும் பெண்களால் பயணங்களை தவிர்க்க முடியாது தான். ஆனால் மேடு பள்ளங்களாக இருக்கும் பாதைகளில் பயணம் மேற்கொள்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகளில் கெமிக்கல்களான பதப்படுத்தும் பொருட்கள், ப்ளேவர்கள் போன்றவைகள் சேர்த்திருப்பதால், அவற்றை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், அவை கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கர்ப்ப காலத்தில் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது மட்டுமின்றி, நல்ல பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகள்

இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மருத்துவரிடம் போதிய ஆலோசனை பெற்று, கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மன அழுத்தம் மற்றும் டென்சன் போன்றவை கருச்சிதைவு ஏற்படுவதை அதிகரிக்கும். ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் மனதில் போட்டு கஷ்டப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு தினமும் யோகா, தியானம் போன்றவற்றை செய்து வர வேண்டும்.

Related posts

உங்களுக்கு இரவு நேரத்தில் இருமல் வாட்டி எடுக்குதா?கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

இந்த அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்! இத படிங்க

nathan

சினைப்பை நீர்க்கட்டி, கருப்பைக்கட்டி- செய்யக்கூடாதவை…செய்யவேண்டியவை…

nathan

ஐவிஎஃப் முறை சிறந்த பயனளிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

nathan

பெண்களுக்கு மாரடைப்பு வரும் அறிகுறி தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா?

nathan

உங்க உடல் உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்த நீங்கள் சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆண்களைத் தாக்கும் இரைப்பை ஏற்றம்.. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் சந்திக்கும் அபாயம் என்ன தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கீல்வாதத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆயுர்வேத பரிந்துரைகள்..!!

nathan