32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சமையல் குறிப்பு டிப்ஸ்

# மைசூர்பாகு, தேங்காய் பர்பி ஆகியவற்றைச் செய்யும் போது சமையல் சோடாவைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் துண்டு போட வராமல் தூள் தூளாக உடையும்.

# மிக்சருக்காக அவல் பொரிக்கும்போது சிதறிப் போகும். இதைத் தவிர்க்க கைப்பிடியோடு கூடிய வடிகட்டியில் அவலைப் போட்டு, கொதிக்கும் எண்ணெயில் முக்கிப் பொரிக்க வேண்டும்.

# ரவை உருண்டை, பயத்த மாவு உருண்டை செய்யும் போது பொடித்த சர்க்கரையையும் நெய்யையும் நன்றாகக் குழைத்து ஒரு தட்டில் தடவுங்கள். பின் மாவை அதில் போட்டுக் கலந்து உருண்டை பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்..

# பட்சணம் செய்யும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க ஒரு சொட்டு வினிகர் விட வேண்டும்..

# அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதைத் தயிரில் கலக்காமல் வேகவைத்த கறிகாய்களுடன் சேர்த்துப் பிறகு தயிர் சேர்த்தால் அவியல் நீர்த்துப் போகாது.

# வாணலியை லேசாக சூடாக்கி அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் புரட்டிய பிறகு தோல் உரித்தால் சுலபமாக உரிக்க முடியும்.

# தேங்காய்த் துவையல் அரைக்கும்போது சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

# சப்பாத்தி மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்துக் கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி பூப்போல் இருக்கும்.

# சூடான பாலில் வாழைப்பட்டையைப் போட்டு ஒரு டீஸ்பூன் தயிர் ஊற்றினால் விரைவாக தயிராகிவிடும்.

# தயிர் புளிக்காமல் இருக்க அதில் சிறு துண்டு தேங்காயைப் போட்டுவைக்கலாம்.

# தண்ணீரில் ஒரு டீஸ்பூன் புளித்த தயிர் அல்லது மோரை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கிப் போட்டால் நிறம் மாறாது.

# வெண்டைக்காய் சீக்கிரம் வதங்கவும் கொழகொழப்புத் தன்மை குறையவும் அதில் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கலாம்.

# அவரைக்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றில் வற்றல் போடும் போது காய்ந்த பிறகு புளித்த தயிரில் ஊற வைத்து மீண்டும் காயவைத்தால் ருசி கூடும்.

# வெண்ணெயை உருக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

# நன்கு புளித்த தயிரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும். பொடுகு குறையும்.

# கருணைக் கிழங்கைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சமைத்தால் சாப்பிடும்போது அரிப்பு இருக்காது.

# வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.

Related posts

அருமையான டிப்ஸ்! அழகைக் கெடுக்கும் தொப்பை அதிரடியாக காணாமல் போக வேண்டுமா?

nathan

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan

கட்டாயம் இதை படியுங்கள் பெற்றோர்களுக்கு அலர்ட் `பெண் குழந்தை விரைவில் பூப்பெய்த ஐஸ்க்ரீமும் ஒரு காரணம்!”

nathan

அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்.. மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு

nathan

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா?

sangika

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்… !

nathan

இந்த 5 பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika