பொதுவாகவே பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது நமக்குத் தெரியும். அதை நெய்யில் வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.
பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகாமல் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் பூண்டு ஆன்ஜியோடென்சின் 2 என்னும் ஹார்மோன் உற்பத்தியை தடுத்து ரத்த நாளங்களை மிதமான இயல்பான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றும். உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.
7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் முழுவதுமாக உறிஞ்சப்பட்டுவிடும். அதோடு மட்டுமல்லாது, தினமும் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் கீழ்வரும் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும்.
கொலஸ்ட்ரால் அளவுகள் சீராகும்.தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்கள் உண்டாகாமல் தடுக்க முடியும்.இரத்த அழுத்தத்தை சீராக்கும்.உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.உடல் சோர்வைப் போக்கும்.