ஒவ்வொருவரும் கட்டாயம்வயிற்றின் மேல் பகுதியில்வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாகநினைத்து விட்டுவிடுவர்.
வயிற்றின் மேல் பகுதியில் எப்போதெல்லாம்வலி ஏற்படுகிறது, மேல் வயிற்று வலியின் போது வேறு எந்த பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடுகிறது என்பதை கூர்ந்துகவனியுங்கள். இதனால் உங்கள் வயிற்று வலியின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும்.
மேல் வயிற்று வலி பித்தப்பை அல்லது கல்லீரலில் பிரச்சனைகளால்வரக்கூடும். பித்தப்பை கற்கள், ஹெபடைடிஸ், கல்லீரல் சுருக்கம் போன்றவற்றாலும் மேல் வயிற்று வலி வரும். மொத்தத்தில் மேல் வயிற்று வலியானது காயங்கள் அல்லதுதொற்றுக்களின் தாக்கத்தால் வருவதாகும்.
எந்த பிரச்சனைகள் இருந்தால், மேல் வயிற்றின் மையப்பகுதியில் வலி ஏற்படும் என்று காண்போம்.
இரைப்பை வாதம்
வயிற்றுப் புண்
வயிற்று புற்றுநோய்
கணைய கோளாறுகள்
குடலிறக்கம்
தண்டுவடக் கோளாறுகள்
குருதி நாள நெளிவு
மாரடைப்பு
நிணநீர் சுரப்பி புற்றுநோய்
செரிமானபிரச்சனைகள் ஏற்பட்டால், அத்துடன் ஒருசில அறிகுறிகளும் தென்படும்.
அடிவயிற்று வலி அல்லதுவீக்கம்
வயிற்று உப்புசம்
அடிக்கடி ஏப்பம்
இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்
குடலியக்கத்தில் மாற்றம்
மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு
வாய்வுத் தொல்லை
வெறும் குமட்டல் உணர்வு
மேல் வயிற்று வலி வேறு சில பிரச்சனையால் ஏற்பட்டால், அப்போது வேறு சில அறிகுறிகள் தென்படும்.
உடல் வலி
இருமல்
வீக்கமடைந்த கல்லீரல் மற்றும் சுரப்பிகள்
காய்ச்சல்
தசைப்பிடிப்புகள்
வலி மற்றும் மருத்துப் போதல்
அரிப்பு
திடீர் எடை குறைவு
மருத்துவரை அணுக வேண்டியதை உணர்த்தும் அறிகுறிகள்:
உணர்வு அல்லது விழிப்புத்தன்மையில் மாற்றம்
நெஞ்சுவலி
அதிகளவு காய்ச்சல்
இதய படபடப்பு
குடலியக்கத் திறன் குறைந்திருப்பது
வேகதாக இதயத் துடிப்பு
மூச்சுபிரச்சனைகள்
கடுமையான மற்றும் கூர்மையான வயிற்று வலி
இரத்த வாந்தி, மலப்புழையில் இரத்தக்கசிவு அல்லதுஇரத்தம் கலந்த மலம் வெளியேறுவது.
Related posts
Click to comment