33.8 C
Chennai
Saturday, Jun 15, 2024
26 1451119377 1 washing raisin
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்.. உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும் என்பது தெரியுமா?

உடலில் பல சிக்கலாக பணிகளை செய்வது கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அல்லது வேறு சில வழிகள் மூலம் உடலினுள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நுழைந்து, இரத்தத்தில் டாக்ஸின்களை உற்பத்தி செய்து, உடல் முழுவதும் நச்சுக்களை கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இரத்தத்தை கல்லீரல் சுத்தம் செய்வதால், இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் கல்லீரலிலேயே படிந்துவிடுகிறது.

இப்படி கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, உடலியக்கம் மெதுவாக பாதிக்கப்பட்டு, அதனால் உடலினுள் பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகிறது. சரி, நம் கல்லீரலை சுத்தம் செய்வது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்? அதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதில் மிகவும் எளிமையான ஒன்று உலர் திராட்சையைக் கொண்டு சுத்தம் செய்வது

இங்கு அந்த உலர் திராட்சையைக் கொண்டு கல்லீரலை எப்படி சுத்தம் செய்வது என்று தெளிவாக காண்போம்.

சரியான உலர் திராட்சையை தேர்ந்தெடுக்கவும் சரியான உலர் திராட்சையைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். கருப்பு நிற உலர் திராட்சை கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. எனவே நீங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய நினைத்தால், கருப்பு நிற உலர் திராட்சையைத் தேர்ந்தெடுங்கள்.

வெளிரிய ப்ரௌன் நிற உலர் திராட்சை வேண்டாம் வெளிரிய ப்ரௌன் நிற உலர் திராட்சை பார்ப்பதற்கு பிரகாசமாகவும் சுத்தமாகவும், ஆரோக்கியமானது போன்றும் காட்சியளிக்கலாம். ஆனால் அவை பிரகாசமாக காணப்படுவதற்கு சல்பர்-டை-ஆக்ஸைடு என்னும் கெமிக்கல் வேலை செய்யப்பட்டிருப்பது தான் காரணம். மேலும் இந்த வகை உலர் திராட்சை முழுமையாக உலர வைக்கப்பட்டிருக்காது. இதனால் இந்த உலர் திராட்சை வகைகளால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது.

ஊற வைத்து பயன்படுத்தவும் உலர் திராட்சையைப் பயன்படுத்தும் முன் நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் நன்கு அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

சுடுநீரில் ஊற வைக்கவும் உலர் திராட்சையை சுத்தம் செய்த பின், ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடேற்றி இறக்கி, அறைவெப்பநிலைக்கு குளிர வைத்து, பின் அதில் உலர் திராட்சையை போட்டு, 24 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நீருடன் உலர் திராட்சையை உட்கொள்ள வேண்டும்.

அடுத்த செயல் திராட்சையை உட்கொண்ட பின், தரையில் நேராக 2-3 மணிநேரம் படுக்க வேண்டும். பின் வலது பக்க அடிவயிற்றில் வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாட்டிலால் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்? இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை என ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால், கல்லீரல் சுத்தமாகி, உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.

கல்லீரல் சுத்தமாக இல்லை என்பதை எப்படி அறிவது? உங்கள் கல்லீரல் சுத்தமாக இல்லாவிட்டால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அவை அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, முகத்தில் அல்லது உடலின் இதர பகுதிகளில் கருமையான புள்ளிகள் தோன்றுவது, அரிப்புக்கள், திடீர் உடல் எடை அதிகரிப்பது, பசியின்மை போன்றவை. நீங்கள் இந்த அறிகுறிகளை உணர்ந்தால், உடனே இந்த முறையை முயற்சித்துப் பாருங்கள்.

26 1451119377 1 washing raisin

Related posts

உங்களுக்கு தெரியுமா வெங்காயம் உரிக்கும் போது கண்ணீர் வருவது ஏன்?

nathan

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த கோடைகால பழம் உங்க இதயத்தையும், சிறுநீரகத்தையும் நன்றாக பாதுகாக்குமாம்…

nathan

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

nathan

சாதாரண காயிற்கு இப்படிபட்ட மகத்துவங்கள் எல்லாம் நிறைந்துள்ளன!…

sangika

மருத்துவ குறிப்புகள்

nathan

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

nathan

நீங்கள் அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan

சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாலட்

nathan