28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
26 1493199129 3tongue
ஆரோக்கிய உணவு

ஈரல், குடல் என உறுப்பு இறைச்சியை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?இதை படிங்க…

பொதுவா அசைவத்தை சாப்பிடுபவர்கள் உறுப்புகளை தனிதனியே அதிகம் விரும்பி சாப்பிடுவதில்லை. சதைப்பகுதியை சாப்பிடுவதையே விருப்பமாக கொண்டிருப்பார்கள். அதுவும் ஆடு, மாடு, பன்றி இறைச்சி, கோழி போன்றவற்றின் உறுப்புகளையே அதிகம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். உண்மையில் சதைப்பகுதியை விட அவற்றின் மூளை, குடல் ஈரல், ஆகியவைகள் மிகவும் சத்துக்கள் உடையவை. எந்த உறுப்பு எந்த மாதிரியான நன்மைகள் தருகிறது என பார்க்கலாம்.

கல்லீரல் : இது மல்டிவிட்டமின் அடங்கியது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. உறுப்பு இறைச்சிகளிலேயே அதிக சக்தியை கொண்ட சக்தி கோபுரமாக விளங்குகிறது.

நாக்கு : இது மிகவும் சுவையானது. மிருதுவாக இருக்கும். அதிக கொழுப்பை உடையது.

சிறு நீரகம் : மனிதனைப் போலவே மிருகங்களுக்கும் இர்ண்டு சிறு நீரகங்கள் உள்ளன. இவை நச்சுக்களையும் கழிவுகளையும் அகற்ற உதவுகிறது.

மூளை : இது மிகவும் நுட்பமானதாக இருக்கும். சிக்கலுடைய உற்ப்பு என்றாலும் அதிக ஒமேகா3 அமினோ அமிலங்கள் நிரம்பியது.

உறுப்புகளை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் : அருமையான இரும்புசத்து கொண்டது : உறுப்புகளில் மிகவும் அதிகப்படியான இரும்புச் சத்து கொண்டிருக்கிறது. தாவரங்களில் இருப்பதை விட உறுப்பு இறைச்சிகளில் அதிகமாக இருக்கிறது

வயிற்றுப் பசியை ஒத்தி வைக்கும் : அதிக ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது என்னவென்றால் இறைச்சியின் சதைப்பகுதியை விட உறுப்புக்களை சாப்பிடுவதால் வயிறு விரைவில் நிரம்பிவிடுகிறது. அதோடு பசியும் உடனே எடுப்பதில்லை.

கொலைன் உற்பத்தி அதிகம் : உறுப்பு இறைச்சிகளில் அதிக கொலைன் இருப்பதால் அவை மூளைக்கு தேவையான சக்தியையும் வலுவையும் தருகிறது.

மலிவானது : உறுப்பு இறைச்சி சதைப்பகுதியைக் காட்டிலும் விலை மலிவானது. ஆரோகியமானதும் கூட. உங்களின் தசை வலிமையை அதிகப்படுத்தும்.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆர்த்ரைடிஸ், கர்ப்பிணிகள் குறைவாக சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் இவை அதிக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதால் ஆர்த்ரைடிஸ் இருப்பவர்களுக்கு வலியை உண்டாக்கும். மற்றபடி பெரிதான மைனஸ் பாயிண்டுகள் இல்லை.

26 1493199129 3tongue

Related posts

சூப்பர் டிப்ஸ்! உடல் எடை குறையணுமா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையான முகம் முதல் முகப்பரு வரை, அனைத்திற்கும் பயன்படும் ட்ராகன் பழம்..!

nathan

உங்களுக்கு தெரியுமா தண்ணீரைக் கொண்டு இவ்வளவு வியாதிகளைக் குணப்படுத்த முடியுமா??

nathan

கிரீன் டீ எடை குறைக்குமா ?

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு சத்துக்களை கொண்டதா நிலக்கடலை….!

nathan

பப்பாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது!

nathan

சமைக்காமலே சாப்பிடலாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க… எலுமிச்சை ஜூஸில் கருப்பு உப்பு சேர்த்து குடித்தால் உடலில் என்னென்ன அற்புதமான நன்மைகள்.

nathan