28.6 C
Chennai
Saturday, May 18, 2024
fyhjhgj
ஆரோக்கிய உணவு

உளுந்தங்களி பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

உளுந்தங்களி மருத்துவ பயன்கள்

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.

சிறுவயது முதலே என் ஆச்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு எங்கள் வீட்டில்.உளுந்தங்கஞ்சி,உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு.
சுங்காத(சுருங்காத) தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடு என்பாள் ஆச்சி.அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்று அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள்.என்னுடைய உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.இதன் செய்முறையை பல பேர் கேட்டுக் கொண்டே இருந்ததனால் இந்தப் பதிவு.

இதன் பலன்கள்:
முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
fyhjhgj
தேவையான பொருட்கள்:

உளுந்து-300gபரு

மாவு(பச்சரிசி மாவு)-

2tbsநெய்-

2tbsபட்டை-1piece

கிராம்பு-2

ஏலக்காய்-2

முந்திரி-10

துருவிய தேங்காய்-3tbs

தேங்காய் பால்-600ml

சீனி (தேவைக்கு)

செய்முறை:

Step-1 -முதலில் ஒரு கடாயில் உளுந்தைப் பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.-பிறகு சூடு தனிந்ததும், வறுத்த உளுந்தை மிக்‌ஷியில் நன்கு பொடி செய்யவும்.-பொடி செய்த உளுந்துடன் பச்சரிசி மாவை கலந்து வைக்கவும்.

Step-2 -ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் பட்டை, கிராம்பு சேர்க்கவும்.-பின்பு ஏலக்காய் இடித்து சேர்க்கவும்.-பிறகு முந்திரி சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்.-அதன் பிறகு துருவிய தேங்காய்ப்பூ சேர்க்கவும்.-தேங்காய்ப்பூ லேசாக வதங்கியப்பிறகு தேங்காய்ப்பால் மற்றும் சீனி சேர்த்து கொதிக்க விடவும்.-இந்நிலையில் முதலில் சேர்த்த பட்டை மற்றும் கிராம்பை கடாயிலிருந்து நீக்கிவிடலாம்(விரும்பினால்).-தேங்காய்ப்பால் கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, பொடி செய்த உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கலவையை கைவிடாமல் நன்கு கிண்டவும்.- கலவை, கேசரி போன்ற பதத்தில் கெட்டியானதும், ஒரு தே.கரண்டி நெய் விட்டு அடுப்பை அனைக்கவும்.-சுவையான காயல் ஸ்பெசல் உளுந்தங்களி தயார். –

-உளுந்தை முன்பாகவே வறுத்து பொடி செய்து ஏர் டைட் (air tight) டப்பாவில் அடைத்து வைத்தால், தேவைப்படும் போது உடனடியாக ஐந்தே நிமிடத்தில் உளுந்தங்களி தயார் செய்து விடலாம்.

Related posts

சத்துக்கள் நிறைந்த கேரட் கீர்

nathan

தண்ணீரில் ஊறவைத்த பயறை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாமா?

nathan

வெற்றிலையில் உள்ள ஆச்சரியமான விஷயம்

nathan

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ் -தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடா மரணம் நிச்சயம்!

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

அத்திப் பழத்தை அப்படியே சாப்பிடுவதைவிட ஜூஸாக குடித்தால் நிச்சயம் உடல் எடையானது குறையும்,

nathan

மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

nathan

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.

nathan