இஞ்சி மற்றும் பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இது பெரும்பாலும் உணவுகளில் ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இஞ்சி, பூண்டு இரண்டுமே உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக உள்ளது. நீங்களே யோசித்து பாருங்கள் இவை இரண்டையும் சேர்த்து உட்கொண்டால் உடலில் எத்தனை நன்மைகள் உண்டாகும் என்று… இந்த பகுதியில் இஞ்சி பூண்டு விழுதை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி காணலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்தை உலகில் பெரும்பான்மையானவர்கள் அனுபவித்து வருகின்றனர். நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், இஞ்சி, பூண்டு விழுது என்பது உங்களது இரத்த அழுத்தத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடும். ஆய்வில் குறைந்த ஹைப்பர் டென்சன் உள்ளவர்கள் தினசரி இஞ்சி,பூண்டு விழுதினை தினசரி உணவில் சேர்த்து வந்தால், அவர்களுடைய இரத்த அழுத்த அளவு மேலும் குறைந்துவிடும். ஆனால் அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவியாக உள்ளது.
செரிமானமாக.. இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதால் அது உணவு செரிமானமாக உதவுகிறது. இது சீன மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உணவை செரிக்க வைக்க உதவியாக உள்ளது. இது வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்த்தொல்லைகள் போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
வலிகளை போக்க உங்களுக்கு அடிக்கடி தலைவலி, தசைகளில் வலிகள் போன்றவை உண்டானால், கடைகளில் கிடைக்கும் மருந்துகளை சாப்பிடுவதை விட இஞ்சி, பூண்டு விழுதினை உணவில் சேர்த்து வருவது நல்ல மாற்றத்தை கொடுக்கும். நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் இயற்கையாக கிடைக்கும் இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதன் மூலமாக ஒற்றை தலைவலி, பல்வலிகள், முதுகு வலி, தசைகளில் உண்டாகும் வலிகள் போன்றவை குணமாகும்.
ஆஸ்துமா சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இன்று பலரையும் பாதித்துள்ளது. அதற்கு இஞ்சி பூண்டு விழுது மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. இஞ்சியில் ஆன்டிபயோடிக் தன்மை உள்ளது. இது காய்ச்சல் மற்றும் சளியை போக்க உதவுகிறது. இது உடல் வலியை போக்கவும் உதவுகிறது.
வயிற்று அல்சர் வயிற்று அல்சர் என்பது அதிகப்படியான மக்களை தாக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இது வயிற்றில் அலசர் மற்றும் கேன்சர் வருவதை தடுக்கிறது. மேலும் இது கட்டிகள் உருவாவதை தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டுகள் கேன்சருக்கான அபாயத்தை குறைக்கின்றன.
உடலுறவு இஞ்சி பூண்டு விழுது உங்களது உடலுறவு நேரத்தை அதிகரிக்கவும், உடலுறவில் ஈடுபட வலிமையை கொடுக்கவும் உதவுகிறது. இது உடலின் சக்தியை அதிகரிக்கிறது. இஞ்சியில் உள்ள அல்லிசின் இரத்த ஒட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக ஆண்மையை அதிகரிக்கிறது.
வயதான தோற்றம் நரைமுடி மற்றும் சுருக்கங்கள் விழுந்த சருமம் என்பது எளிதான ஒன்று அல்ல. இது வெளிப்புற முதுமையை குறிக்கிறது. ஆனால் வயதான காலத்தில் வர வேண்டிய உடல்நல பிரச்சனைகள் எல்லாம் முன் கூட்டியே வருவதை தடுக்க இஞ்சி, பூண்டு விழுது உதவுகிறது. இது இருதய பாதிப்புகள் போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கேன்சர் போன்ற நோய்களின் தாக்குதல் உண்டாகாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நச்சுக்களை வெளியேற்ற உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த இஞ்சி, பூண்டு விழுது உதவுகிறது. இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உங்களது உடலின் வெளிப்புறத்தை சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதுமா? உட்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது.
அளவு என்ன? தினமும் ஒரு டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதினை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. உங்களுக்கு விரைவில் அறுவை சிகிச்சை ஏதாவது நடக்க போகிறது என்றால் இஞ்சி, பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதை தவிர்க வேண்டும்.