30.8 C
Chennai
Friday, Jul 18, 2025
pulllal
அறுசுவைசைவம்

உருளைக்கிழங்கு புலாவ்

தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிது
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி – 1 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 3
ஏலக்காய் – 4
பட்டை – 1
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்.

pulllal

செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, பின் விசிலை போட்டு, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு விசில் போனவுடன், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி.

Related posts

சத்தான குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி

nathan

சுண்டக்காய் வத்தக்குழம்பு

nathan

ட்ரை கலர் சாண்ட்விச்

nathan

ஃபிளாக்ஸ் சீட்ஸ் பருப்பு பொடி

nathan

அதிரசம்

nathan

சளி, இருமலுக்கு சிறந்த மிளகு அன்னம்

nathan

சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி

nathan

அப்பளக் குழம்பு

nathan

கும்மூஸ் ( HUMMOOS )

nathan