29.8 C
Chennai
Monday, Jul 13, 2026
சைவம்

முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்tamil samayal kurippu

உங்கள் வீட்டில் கத்திரிக்காய், முருங்கைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு சாம்பார் வைக்காமல், சற்று வித்தியாசமாக பொரியல் செய்து சுவைத்துப் பாருங்கள். அதிலும் இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சுவைத்தால் அற்புதமாக இருக்கும்.

சரி, இப்போது அந்த முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியலை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) முருங்கைக்காய் – 1 (நீள துண்டுகளாக்கிக் கொள்ளவும்) கத்திரிக்காய் – 1 (நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கடுகு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். காய்கள் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, மிளகாய் தூள் தூவி பிரட்டி, பச்சை வாசனை போனதும் இறக்கினால், முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் ரெடி!!!

Related posts

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பஹடி

nathan

பாகற்காய் பொரியல்

nathan

குதிரைவாலி கொத்தமல்லி சாதம்

nathan

பனீர் கச்சோரி

nathan

சுண்டைக்காய் குழம்பு

nathan

கொண்டை கடலை குழம்பு

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

சூப்பரான வடை மோர் குழம்பு

nathan

மண‌த்தக்காளி கீரை மசியல் செய்முறை விளக்கம்

nathan