puchka pani puri
சிற்றுண்டி வகைகள்

பானி பூரி!

தேவையானவை:

மைதா – 1 கப், ரவை – 50 கிராம், தண்ணீர், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பானிக்கு: புதினா – 1/2 கட்டு, கொத்தமல்லித் தழை – 1/2 கட்டு, பச்சைமிளகாய் – 4, வெல்லம் – 50 கிராம், புளி – 50 கிராம், சீரகத் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு, தண்ணீர் – தேவையான அளவு.
பூரிக்குள் வைக்க: உருளைக்கிழங்கு – 2, சீரகத் தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.
puchka pani puri
செய்முறை:

மசாலா: உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும்.
பூரி செய்வதற்கு: மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து, அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து அந்த உருண்டைகளைத் தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாகப் பொரிக்கவும். பூரி உள்ளங்கைக்குள் கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும்.

பானிக்கு:
புளியைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். பிறகு வெல்லத்தை அதனுடன் சேர்த்து நன்கு கரைக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லித் தழையை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, பச்சைமிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து புளித்தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.

பூரியில் மசாலாவை வைத்து, பானியில் தோய்த்து எடுத்துப் பரிமாறவும்.
பானி பூரி… சுவை மிகுந்தது. அது சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால், பானி பூரியையும் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது!

Related posts

பட்டாணி பூரி

nathan

ஸ்வீட் பிரெட் டோஸ்ட்

nathan

ஆப்பிள் ஸ்வீட் பஜ்ஜி

nathan

பாசிப்பருப்பு தோசை

nathan

சத்தான ஸ்நாக்ஸ் தினை – உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

ராஜ்மா சாவல்

nathan

அச்சு முறுக்கு

nathan

பாசிப்பருப்பு வெஜ் ஊத்தப்பம்

nathan

உருளைக்கிழங்கு மசாலா போளி செய்ய சிரமப்பட வேண்டாம் இதோ……..

nathan