சிற்றுண்டி வகைகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

என்னென்ன தேவை?

மைதா மாவு – 2 கப்.

பேஸ்ட் செய்ய….

மைதா – 2 டேபிள்ஸ்பூன்,
கருஞ்சீரகம்- 1/2 டீஸ்பூன்,
சமையல் சோடா- சிறிது,
நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

கஸ்தாவின் மத்தியில் தூவுவதற்கு…

தனியா தூள், மிளகாய் தூள்,
மாங்காய் தூள் – தேவையான அளவு.

பொரிப்பதற்கு…

எண்ணெய், உப்பு,
சாட் மசாலா – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மைதா மாவு, உப்பு, சீரகம் சேர்த்து விரல் நுனிகளால் கலக்கவும். அது ரொட்டி தூள் மாதிரி வரும். பின் சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதமாக பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். 20 நிமிடத்திற்கு பின் மைதா கலவையை ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து மெல்லிசாக பூரியாக தேய்த்து, பேஸ்ட்டை சிறிது பூரியின் மேல் தேய்த்து அதன் மேல் தூள் வகைகளைத் தூவி இரண்டாக மடித்து, அழுத்தி உருட்டு கட்டையால் மெதுவாக அழுத்தி பிஸ்கெட் மாதிரி இட்டு சிறிது கனமாக இரண்டாக மடித்த பின் விழுதை தேய்த்து மசாலா தூவி மடிக்க வேண்டும். பின் ஒரு முள் கரண்டியால் இரண்டு பக்கமும் குத்தி இப்படி எல்லாவற்றையும் செய்து மிதமாக காய்ந்த எண்ணெயில் பொரித்து வடித்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

Related posts

சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை வாழைப்பழ பணியாரம்

nathan

கம்பு தோசை..

nathan

எக் பிரெட் உப்புமா

nathan

சுவையான ஆம வடை

nathan

காளான்  தயிர் பூரி (மஷ்ரூம் தஹி பூரி)

nathan

கைமா பராத்தா

nathan

கறிவேப்பிலை பொடி மினி இட்லி

nathan

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

nathan

மிளகு வடை

nathan