32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
சிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2 கடலை மாவு – 3/4 கப் அரிசி மாவு – 1/4 கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன் கேசரிப் பவுடர் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனை வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பேக்கிங் சோடா, இஞ்சி பூண்டு பேஸ்ட், கேசரிப் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, மெதுவாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை மாவில் நனைத்து, எண்ணெயின் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

Related posts

முந்திரி வடை

nathan

வெல்லம் கோடா

nathan

அதிரசம்

nathan

குழந்தைக்கு விருப்பமான சிக்கன் கொத்துக்கறி வடை

nathan

எலுமிச்சை இடியாப்பம்

nathan

சோயா காளான் கிச்சடி

nathan

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி…!!

nathan

சேனைக்கிழங்கு சுக்கா

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

nathan