28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
09 1386592026 30 1385826470 alcoholbasedcleaner
ஆரோக்கிய உணவு

சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள்!!!

வீட்டை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான வேலைகளில் ஒன்றாகும். வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையிலும் உள்ள பொருட்களை வெவ்வேறு வழிகளில் பராமரிக்க வேண்டும். உதாரணமாக, சமையறையில் பயன்படுத்தப்படும் கிளீனரை குளியலறைக்கு பயன்படுத்த முடியாது. அதனால், நமது வீட்டில் உள்ள அறைகளுக்கு தகுந்தவாறு கிளீனர்களை தேர்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டின் சமையல் அறைதான் உங்கள் வீட்டிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த அறையாகும். நாம் உயிர்வாழுவதற்கு இன்றியமையாத உணவு உற்பத்தியாகும் இடமும் இதுதான். சமையலறையை சுத்தம் செய்தல் என்பது நமது வீட்டு வேலைகளில் ஒன்றாகும். மேலும் சமையல் செய்தலில் இன்றியமையாத ஒன்றும் கூட. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. தூய்மையான இடத்தில் சமைக்கப்படும் உணவு நமக்கு ஆரோக்கியமான உடல்நலத்தை அளிக்கும். தூய்மையான சமையலறையில் சமையல் செய்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவும். உங்கள் சமையல் அறையில் குறைந்த பொருட்களை கொண்டே சமைப்பது சிறந்ததாகும். சமையல் அறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்

நாம் எல்லோரும் விரும்புவது சுத்தமான பளிச்சிடும் சமையல் அறையைதான். இது உங்கள் சமையல் அறையை அழகாக காட்சியளிக்கச் செய்து சமையல் செய்வதற்கும் சமைத்த உணவை வைப்பதற்கும் தகுந்த இடமாக இருக்கும். உங்கள் சமையலறையை சுத்தமாக வைக்கும் சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துகொள்ளுவது இன்றியமையாத ஒன்றாகும். மேலும், உங்கள் சமையலறையில் சமையல் செய்யத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதும் இன்றியமையாத ஒன்றாகும். உங்கள் பாத்திரங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து அவற்றை உடனுடனே சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். முதலில் உங்கள் சமையலறையில் எந்த இடம் ஒழுங்கற்று இருக்கின்றது என்பதை கண்டறிந்து அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்து விடவேண்டும். உங்கள் சமையலறையை தூய்மையாக வைக்க உதவும் சில பொருட்களை இப்பொழுது பார்க்கலாம்.

அனைத்து உபயோக கிளீனர் (ஆல் பர்பஸ் கிளீனர்) இந்த கிளீனர் உங்கள் சமையலறை சுத்தம் செய்ய உதவும் பொருட்களில் ஒன்றாகும். இதனை பயன்படுத்தி உங்கள் சமையலறை அலமாரிகளை சுத்தம் செய்யலாம். பெரும்பாலும் உங்கள் சமையலறை அலமாரிகளில்தான் அதிக அழுக்கு தேங்கும் இடமாக இருக்கும். இதனை சுத்தம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஸ்காட்ச் ப்ரைடை இந்த கிளீனரில் நனைத்து தேய்த்தால் உங்கள் சமையலறை பளிச்சென்று காட்சியளிக்கும்.

09 1386592026 30 1385826470 alcoholbasedcleanerவீட்டில் தயாரித்த ஆல்கஹால் கிளீனர் கிரானைட் மற்றும் மார்பிள்லான சமையலறை மேடை உங்கள் சமையல் அறைக்கு மேலும் அழகு சேர்க்கும். ஆனால், இவற்றை பராமரித்து சுத்தம் செய்வது என்பது இன்றியமையாத ஒன்றாகும். வீட்டில் தயாரித்த ஆல்கஹால் கிளீனர்களை பயன்படுத்தி உங்கள் கிரானைட் மேடைகளை சுத்தமாக்கலாம். எலுமிச்சை அல்லது வினிகர் போன்றவை உங்கள் கிரானைட் கற்களின் பளபளப்பை போக்கச்செய்துவிடும்.

வினிகர் சமையலறையை சுத்தம் செய்வதற்கு வினிகரை பயன்படுத்தலாம். இது தரையில் உள்ள அழுக்கை போக்குவதற்கு உகந்ததாகும். ஒரு பக்கெட் தண்ணீரில் சிறிது வினிகர் சேர்த்து உங்கள் தரையை சுத்தம் செய்யலாம். ஆல் பர்பஸ் கிளீனர் (அனைத்து உபயோக கிளீனர்) கொண்டு உங்கள் தரைகளை சுத்தம் செய்யலாம்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடா சமையலறையை சுத்தம் செய்ய உதவும் இன்றியமையாத பொருட்களில் ஒன்றாகும். ஹைட்ரஜன் பெராக்சைடுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை தெளித்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் சுத்தம் செய்ய வேண்டும். இது சமையலறையை பளிச்சென்று மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றாகும்.

பாத்திரம் துலக்கும் டிடர்ஜென்ட்/சோப்பு பாத்திரங்கள் இல்லாத சமையலறை இருக்குமா? பாத்திரம் துலக்கும் டிடர்ஜென்ட் உங்கள் சமையல் அறையை சுத்தம் செய்யும் பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுத்தமான பாத்திரத்தில் சமைத்த உணவு தான் ஆரோக்கியமான உணவாகும். அதனால், உங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். சரியான பாத்திரம் துலக்கும் டிடர்ஜென்ட்/சோப்பை தேர்வு செய்து உங்கள் பாத்திரங்களை பளிச்சிடச் செய்யுங்கள்.

09 1386592031 30 1385826475 bakingsodawithwaterபேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் பெருமளவு பேக்கிங் சோடாவில் சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும். ஓவனின் தரை பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் சுத்தம் செய்யவும். இது உங்கள் ஓவனை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழியாகும். பேக்கிங் சோடா உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய உதவும் ஒரு சிறந்த பொருள் தானே?

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல்கள் சமையலறையில் இருக்கும் குப்பை தொட்டியில் இருந்து துர்நாற்றம் ஏற்படக்கூடும். இதனை போக்குவதற்கு எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோள்களை வினிகருடன் ஐஸ் ட்ரேயில் வைத்து எடுத்து மிக்ஸியில் 10 நொடிகள் வரை அரைக்கவும். இது உங்களை துர்நாற்றத்தில் இருந்து விடுவித்து நல்ல நறுமணத்தை அளிக்கும்.

பேப்பர் டவல் உங்கள் சமையலறையை சுத்தம் செய்வதற்கு ஸ்பான்ஜ்க்கு பதிலாக பேப்பர் டவலை பயன்படுத்தலாம். ஏன்னெனில், ஸ்பான்ஜ் மூலமாக கிருமிகள் எளிதில் பரவும் வாய்ப்பு இருக்கின்றது. அதனால், பேப்பர் டவல்களை பயன்படுத்தி பின்னர் தூக்கி எறிந்துவிடலாம்.

கடைகளில் கிடைக்கும் கிளீனர்கள் வீட்டில் தயாரித்த கிளீனர்களை பயன்படுத்தி உங்கள் சமையலறையில் உள்ள எல்லா இடங்களையும் சுத்தம் செய்ய முடியாது. சில கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் க்ளீனர்களை உபயோகிக்க வேண்டிஇருக்கும்

09 1386592035 30 1385826481 cinnaஇலவங்கம் மற்றும் உப்பு ஓவனில் வைத்த உணவு கருகிவிட்டால் ஓவனை சுத்தம் செய்வதற்கு சிறிதளவு உப்பு தூவி சுத்தம் செய்ய வேண்டும். புகையின் துர்நாற்றத்தை போக்குவதற்கு சிறிதளவு இலவங்கத்தை உப்புடன் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

Related posts

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika

தெரிஞ்சிக்கங்க…காலையில் சாப்பிட கூடாதவைகளும் சாப்பிட வேண்டியவைகளும்…!!

nathan

பால் குடித்த பின்பு இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

முயன்று பாருங்கள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு!!

nathan

உங்க முடி எலிவால் போன்று உள்ளதா? சில அற்புத வழிகள்!

nathan

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பெண்களின் ஹார்மோன்கள் அதிகரிக்க கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

நாவல் பழத்தை சாப்பிடுவதால் இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு வராது!

nathan

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan