27.1 C
Chennai
Saturday, May 24, 2025
ஆரோக்கிய உணவு

முருங்கைக்கீரை பொரியல்

முருங்கைக்கீரை பொரியல்
தேவையான பொருட்கள் வருமாறு:-முருங்கைக்கீரை- 2 கப் அளவு,
வெங்காயம்-4,
பச்சை மிளகாய்-4,
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்,
பூண்டு, புளி, வத்தல்- சிறிதளவு,
உப்பு தேவையான அளவு,
சமையல் எண்ணெய்- சிறிதளவு.தாளிப்பதற்குவெந்தயம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி
மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை.

செய்முறை:-

• முருங்கைக்கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

• தேங்காய் துருவல், வத்தல், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அம்மியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

• வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக அரிந்துகொள்ளவும்.

• அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டு, காய்ந்த பின்னர் கீரையை அதில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வதக்கவும்.

• சிறிது நேரம் கழித்து, ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காய், வத்தல் உள்ளிட்டவற்றின் கலவையையும் சேர்த்து, நன்றாக கிளற வேண்டும். தேவையான உப்பு சேர்க்கவும்.

• பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து, பொரியலுடன் சேர்க்க வேண்டும்.

• இப்போது முருங்கைக்கீரை பொரியல் தயார் ஆகிவிடும்.

Related posts

மாதவிலக்கு கோளாறை போக்கும் அவரை

nathan

இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்

nathan

உங்களுக்கு தெரியுமா பாதாம் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தூதுவளை அடை

nathan

இத்தனை நன்மைகளா…!! முளைகட்டி சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள்

nathan

சூப்பரான ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan

குழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவை கொடுக்கலாம் என்று தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

காளான்களை அதிகம் சாப்பிடுவது அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது…

nathan

நீங்கள் வாரம் ஒரு நாள் கோழி நெஞ்சுக் கறி சாப்பிடுங்க! காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!

nathan