30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

மாவு பிசைகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.

காலம் எவ்வளவு மாறினாலும் பூரி மற்றும் சப்பாத்தி விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகமானோர் இருக்கவே செய்கின்றனர். பப்படம், தந்தூரி ரொட்டி, சமோசா, பாதுஷா போன்ற மாவுப் பதார்த்தங்களும் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

மாவுப் பதார்த்தங்கள் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று சாப்பிடுபவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு மாவு பிசையும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானது. அதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

* சமோசாவிற்கு மாவு பிசையும்போது மைதா மாவுடன் சிறிது சோளமாவு சேர்த்து பிசைந்தால் வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

* சப்பாத்திக்கு மாவு தயாரிக்கும்போது கோதுமை மாவில் சிறிது `மலாய்’ சேர்த்து பிசையவேண்டும்.

* சுக்கா ரொட்டிக்கு மாவு தயாரிக்கும்போது, கோதுமை மாவுடன் கொதிக்கும் வெந்நீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசைந்தால் மென்மையான சுக்கா ரொட்டிகளைப் பெறலாம். பிசைந்த மாவை அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்துவிட்டு, ரொட்டி தயாரிக்க வேண்டும்.

* கோதுமை அடை செய்ய கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் சேர்த்து பிசைந்தால் அடை மிருதுவாக இருக்கும்.

* பூரி தயாரிக்க மைதாவுடன், கோதுமை மாவு, சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் மிருதுவாக இருக்கும்.

* பூரி மாவுடன் சிறிது குலோப் ஜாமுன் மிக்ஸ் சேர்த்து பிசைந்தால் பூரிக்கு சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.

* சோளமாவு சப்பாத்தி செய்ய வேக வைத்த உருளைக் கிழங்கை மசித்து, மாவுடன் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* பாதுஷா செய்ய மைதா மாவுடன், தயிர், டால்டா சேர்த்து தண்ணீர்விடாமல் பிசைந்தால் பாதுஷா மிருதுவாக திரிதிரியாக வரும்.

* தந்தூரி ரொட்டி செய்ய மாவில் கொதிக்கும் தண்ணீர், உப்பு, சோடாமாவு சேர்த்து பிசையலாம்.

* கடலை மாவு பப்படம் செய்ய கடலைமாவுடன் சிறிது மைதா கலந்து பிசைந்து தயாரியுங்கள்.

* சோமாஸ் செய்யும்போது மைதாவுடன் சூடான பால் கலந்து மாவு தயாரிக்கவும்.

* பரோட்டா செய்ய மைதாவுடன், கால் பங்கு கோதுமை மாவு கலந்து காய்ச்சிய எண்ணெய், தண்ணீர் கலந்து இலகுவாக பிசையவும்.

* ருமாலி ரொட்டி (மிகவும் மெல்லிய மைதா சப்பாத்தி) செய்ய மைதாவுடன் காய்ச்சிய எண்ணெய் தண்ணீர், சிறிது சீஸ் சேர்க்கவும்.

* தேப்னா செய்ய கோதுமை மாவுடன், கடலைமாவு, ரவை, அரிசிமாவு சேர்த்து பிசையுங்கள்.

* மசாலா சப்பாத்தி செய்ய கோதுமை மாவுடன் மிளகு, சீரகம், புதினா, கொத்தமல்லி, மசித்த பாலக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்து பிசையலாம்.

* பருப்பு- தயிர் கூட்டு செய்யும்போது வேக வைத்த பருப்புடன், காய்கறி, தயிர் கலந்து, இறக்கும்போது சிறிது மைதா கலந்து விட்டால் கூட்டு வெண்மையாக, சுவையாக இருக்கும்.

Related posts

இதோ எளிய நிவாரணம் அறுவை சிகிச்சையால் ஏற்படும் தழும்பை இயற்கையாக மறைப்பது எப்படி?..!!

nathan

கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்

nathan

காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யலாமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்… சிறுநீரக கற்களுக்கு தீர்வு தரும் அன்னாசி பழம்!

nathan

சிறந்த லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவில் இருக்கும் குழந்தைக்கு பாடம் கற்று கொடுப்பது சரியா? அதன் விளைவு எப்படி இருக்கும்?

nathan

பித்தம் தலை சுற்றல் : தலைசுற்றலுக்கான காரணங்கள்

nathan

குழந்தைக்கு ஏற்படும் சிரங்கு நோயின் தன்மையைக் குறைக்கும் வழிகள் -தெரிஞ்சிக்கங்க…

nathan

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan