27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
shutterstock 402048370a 16406
ஆரோக்கிய உணவு

லஸ்ஸி… வெயிலுக்கு இதம், உடலுக்கு நலம் தரும் அமிர்தம்!

பால், தயிர், மோர், நெய்… பால் பொருள்கள் நமக்குப் புதிதல்ல. ஆதிகாலத்திலிருந்து தமிழரின் உணவுப் பழக்கத்தில் மிக முக்கியமான இடம் இந்த ஆரோக்கிய உணவுகளுக்கு எப்போதும் உண்டு. `லஸ்ஸி’ என்கிற பெயர் மட்டும்தான் தமிழ் அல்ல. மற்றபடி, தயிரில் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இதன் செய்முறையை முயன்று, ருசி பார்க்காத தமிழ் மக்கள் இருக்க முடியாது. அதிலும், பட்டையைக் கிளப்புகிற வெயிலுக்கு லஸ்ஸி, அமிர்த பானம்.

லஸ்ஸி

பாலமுருகன்கோடை காலங்களில் லஸ்ஸிக்கான மவுசே தனி. அப்படி ஓர் ஆனந்தம், மனதுக்கு உற்சாகம், இதம் அத்தனையும் தரும். நம் சுவை நரம்புகளைத் தூண்டி, நம்மை மெய்மறக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு. சரி… லஸ்ஸி வெறும் தாகம் தீர்க்கும் பானம்; உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் பானம். அவ்வளவுதானா? இல்லை. அதோடு, `பல மருத்துவப் பயன்களையும் தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். `ஆயுர்வேதத்தில் இதன் பயன்பாடு அளப்பரியது’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். லஸ்ஸியின் பெருமை, அதன் மருத்துவப் பயன்கள், ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு இருக்கும் பிணைப்பு அனைத்தையும் விவரிக்கிறார் இங்கே…

லஸ்ஸி
இது, தயிருடன் சர்க்கரை, தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. லஸ்ஸிக்கும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. ஆயுர்வேதத்தில் இதற்கு ‘ரஸாலா’ என்று பெயர். இதைப் பற்றிய குறிப்பு ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, புராணங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. மகாபாரத காலத்திலேயே இது பயன்படுத்தப்பட்டதாக பழமையான ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. கண்ணன், பீமனுக்கு இந்த பானத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு `பீம சேன சீகாரணி’ என்று பெயராம். சத்ரபதி சிவாஜி காலத்தில் வாழ்ந்த ஆயுர்வேத அறிஞர் ரகு நாத சூரி, தான் எழுதிய ‘போஜன குதூகலம்’ என்ற ஆயுர்வேத (உணவு தயாரிப்பு தொழில்நுட்ப) நூலில் இதன் மகத்துவத்தையும் பல வகையான லஸ்ஸி தயாரிப்பு முறைகளைப் பற்றியும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரூட்ஸ் லஸ்ஸி

பலன்களும் சத்துகளும்
இதில் கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி
பொதுவாகவே பால் பொருட்கள் உடலுக்கு நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கக்கூடிய புரோபயாட்டிக்ஸ் (Probiotics) நிறைந்த உணவுகள். இவை, வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

செரிமானம்
லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும்.

வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.

பற்கள், எலும்புகளை வலுவாக்கும்
லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

உடனடி எனர்ஜி
வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 (Vitamin B12 Deficiency) குறைபாட்டு நோய் நீங்கும்.

தசைகளை வலிமையாக்கும்
லஸ்ஸியில் புரோட்டீன் நிறைவாக உள்ளது. இது தசைகளை வலிமையாக்கும். உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு.

கோடைகால நோய்களை நீக்கும்
கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை (Gastro Intestinal) நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

உடலுறவில் நாட்டம் உண்டாகும்
லஸ்சியில் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு உடலுறவில் நாட்டம் உண்டாக்கும் சக்தி இருக்கிறது. புரோபயாட்டிக்ஸ் உணவு என்பதால், ஆண்மைக்குறைவைத் தடுக்கவும் உதவும்.

லஸ்ஸி

சில ஆயுர்வேத லஸ்ஸிகள்…

ரஸாலா

தேவையானவை:

தயிர் – 1 கப்
சர்க்கரை – 1 தேக்கரண்டி
தேன் – சர்க்கரையில் நான்கில் ஒரு பங்கு
நெய், சுக்கு, மிளகு, லவங்கப் பொடி – சிறிதளவு.

செய்முறை:

தயிருடன் சர்க்கரை, தேன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அத்துடன் சிறிது நெய் சேர்த்து, ஒரு சிட்டிகை சுக்கு, மிளகு, லவங்கப் பொடி சேர்த்தால் ரஸாலா ரெடி. இதை மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்துவது சிறந்தது. இது, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்; உடல் சோர்வை நீக்கும்.

கற்பூர லஸ்ஸோ

தேவையானவை:

தயிர் – 1 கப்
வெல்லம் – தேவையான அளவு
பச்சைக் கற்பூரம் – சிறிதளவு.

செய்முறை:
தயிருடன் வெல்லத்தைக் கலந்துகொள்ளவும். இதை நல்ல சுத்தமான துணியால் வடிகட்டி, சிறிது பச்சைக் கற்பூரம் கலந்து பருகலாம். அதிக உடலுழைப்பு உள்ளவர்களுக்கு மிகவும் ஆற்றல் தரக்கூடியது.

ஏலாக்காய் லஸ்ஸி

ஏலாக்காய் லஸ்ஸி

தேவையானவை:
தயிர் – 1 கப்
கற்கண்டு – 1/2 கப்
ஏலக்காய், மிளகு, கிராம்பு – சிறிதளவு.

செய்முறை:
புளிப்பில்லாத தயிரில் கற்கண்டு சேர்த்து, அதைத் துணியால் வடிகட்டி மண் பானையில் ஊற்றிக்கொள்ளவும். அதோடு பால், சிறிது ஏலக்காய், மிளகு, கிராம்பு சேர்த்துப் பருகினால் வெயில் காலத்தில் ஏற்படும் பலவீனம் நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.

கவனம்
தயிர் ஆரோக்கியமானதுதான் ஆனால், தயிரை தினமும் எடுத்துக்கொள்ள கூடாது. அதேநேரத்தில் அதனுடன் சர்க்கரை சேர்த்து லஸ்ஸியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் உப்பு, காரப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் லஸ்ஸிகளும் உள்ளன. இவை வெயில் காலத்துக்கு ஏற்றவையல்ல. பனி மற்றும் மழைக் காலத்துக்கு உகந்தவை. சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்த லஸ்ஸியைத்தான் வெயில் காலத்தில் குடிக்க வேண்டும். இதை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

shutterstock 402048370a 16406

Related posts

அடங்கப்ப முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நோய் குணமாகுமா.?

nathan

புத்துணர்வு தரும் உணவுகள்

nathan

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்து வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுபவரா நீங்கள்? இதையும் படிங்க

nathan

ஆலு பன்னீர் கோப்தா

nathan

இதோ மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் !இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

எச்சரிக்கை தேங்காய் எண்ணெய் விஷத்தை விட மோசமானது! ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்கள்!

nathan

அதிகப்படியா ஆரஞ்சு சாப்பிடுவது உங்களுக்கு எந்த மாதிரியான பக்க விளைவை ஏற்படுத்தும்

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan