28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
201704221523483712 Bajra Poori bajra puri SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி

மாலையில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக டிபன் செய்து கொடுக்க நினைத்தால் பாஜ்ரா பூரி செய்து கொடுக்கலாம். இந்த பூரி காரசாரமாக சாப்பிட சூப்பராக இருக்கும்.

சூப்பரான டிபன் பாஜ்ரா பூரி
தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 2 கப்,
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்,
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்,
மாங்காய்த் தூள் – 1 டீஸ்பூன்,
வெந்தயக்கீரை – 2 கட்டு
பொடித்த சர்க்கரை – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது – தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர், பொரிப்பதற்கு எண்ணெய் – தேவைக்கு,
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்.

201704221523483712 Bajra Poori bajra puri SECVPF

செய்முறை :

* வெந்தயக்கீரையை காம்பு இல்லாமல் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெள்ளை எள், சீரகத் தூள், மாங்காய்த் தூள், வெந்தயக்கீரை, பொடித்த சர்க்கரை, மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கலந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து, அதன் மேல் எண்ணெய் 1 டீஸ்பூன் தடவி மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.

* பின் மாவை எடுத்து உள்ளங்கையில் எண்ணெய் பூசிக் கொண்டு நன்கு உருட்டவும்.

* பிசைந்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கை கொண்டு பூரி மாதிரி கையில் மெல்லியதாக பூரிகள் தட்டவும். இந்த பூரிகள் கட்டையால் உருட்டக்கூடாது.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொறு பூரிகளாக போட்டு பொரிக்கவும். கரண்டி கொண்டு அழுத்தியும் அதன் மேல் எண்ணெயை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றியும் பொரித்து எடுக்கவும். திருப்பிப் போட்டு பொரித்து எடுத்து வடித்து பரிமாறவும்.

* சூப்பரான பாஜ்ரா பூரி ரெடி.

* இந்த பூரிக்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடலாம்.

Related posts

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan

வெஜிடபிள் பாட் பை

nathan

இலை அடை

nathan

பெப்பர் இட்லி

nathan

வாழைப்பழம் கோதுமை தோசை

nathan

கார்ர பெண்டலம் பிட்டு

nathan

பன்னீர் போண்டா செய்முறை விளக்கம்

nathan

எள் உருண்டை :

nathan