என்னென்ன தேவை?
தக்காளி – 5
தக்காளி சாறு – 4 கப்
பூண்டு – 2
பேசில் இலைகள் – 1/2 கப்
கிரீம் – 1/4 கப்
ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கருப்பு மிளகு – சிறிது
உப்பு – சிறிது
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் பூண்டு சேர்த்து 30 விநாடிகள் வதக்கி நறுக்கிய தக்காளி, தக்காளி சாறு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை குறைத்து, அவை தடித்து வரும் வரை சமைக்கவும். இப்போது அடுப்பை அணைத்து பேசில் இலைகளை போட்டு ப்ளெண்டர் கொண்டு கலக்கவும். கிரீமை அதோடு சேர்த்து கலந்து, கருப்பு மிளகு தூவி பேசில் இலைகள் கொண்டு அலங்காரிக்கவும்.