சூப் வகைகள்

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்

எளிய முறையில் சுவையான சத்தான பேபி கார்ன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான பேபி கார்ன் சூப்
தேவையான பொருட்கள் :

பேபி கார்ன் – 10
மைசூர் பருப்பு – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பட்டை – சிறு துண்டு
இலவங்கம் – 2
எலுமிச்சம்பழச்சாறு – 1 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி
வெண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்

செய்முறை :

* பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்

* கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை, இலவங்கம் தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி அதனுடன் பேபி கார்னையும் சேர்த்து வதக்கவும்.

* அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி மிளகு தூள், எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

* சுவையான சத்தான பேபி கார்ன் சூப் ரெடி.

Related posts

டயட்டில் இருப்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சூப் செய்வது எப்படி?

nathan

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

nathan

சத்து நிறைந்த சாமை – காய்கறி சூப்

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan

சைனீஸ் சிக்கன் சூப்

nathan

புரோகோலி – வால்நட் சூப்! ஈஸி குக்!

nathan

முருங்கை இலை சூப்

nathan

சூப்பரான இறால் – காய்கறி சூப்

nathan