31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
சூப் வகைகள்

எளிதான முறையில் வாழைத்தண்டு சூப் செய்ய…..

தேவையானப் பொருள்:

வாழைத்தண்டு – 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1
மிளகாய் வற்றல் – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 5
இஞ்சி – 1 துண்டு
பூண்டு பல் – 2
கொத்தமல்ல, கறிவேப்பலை – தேவையான அளவு
தனியா – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 6 கப் நீர் விட்டு சிறுதீயில் கொதிக்க விடவும் தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

வாழைத்தண்டு பாதி வெந்திருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவும்.

சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இல்லை எனில் மிளகு தூள் சூப் சாப்பிடும்போது கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.1478602718 3386

Related posts

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்…

nathan

ப்ராக்கோலி சூப்

nathan

சுவையான மீன் சூப்

nathan

மருத்துவ குணம் நிறைந்த புதினா சூப்

nathan

தக்காளி சூப்

nathan

வாழைத்தண்டு சூப் செய்முறை

nathan

தாய்லாந்து கோகனட் சூப்

nathan

பாலக் கீரை சூப்

nathan