31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சூப் வகைகள்

நாட்டுக்கோழி ரசம்

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – அரை கிலோ,
தக்காளி – 150 கிராம்,
சின்ன வெங்காயம் – 200 கிலோ,
பட்டை, சோம்பு – சிறிதளவு,
மஞ்சள்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்,
பூண்டு – 10 பல்,
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம்(பாதி) ஆகியவற்றை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

• இத்துடன் நாட்டுக்கோழியையும் சேர்த்து வதக்கவும்.

• பிறகு, அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

• கறி நன்கு வெந்ததும் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் போட்டு இறக்கினால்… ‘கமகம’வென்று நாட்டுக்கோழி ரசம் ரெடி!

• இதை சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். நாட்டுக் கோழி ரசம் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

Related posts

சூப்பரான சுவையான வெஜிடபிள் சூப்..!

nathan

உடல் எடையை குறைக்கும் ராஜ்மா சூப்

nathan

வல்லாரை கீரை சூப்

nathan

தால் சூப்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான ரசப்பொடி

nathan

ஓட்ஸ், பூண்டு சூப்

nathan

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan

சளி தொல்லையை போக்கும் நண்டு சூப்

nathan