33.9 C
Chennai
Friday, May 23, 2025
201704051441377237 Garlic soaked in honey benefits SECVPF
ஆரோக்கிய உணவு

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்

காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

தேனில் ஊற வைத்த பூண்டை சாப்பிடுவதால் என்ன பலன்
பண்டையக் காலத்தில் இருந்து பூண்டு மற்றும் தேன் ஓர் சிறந்த மருத்துவப் பொருளாக திகழ்ந்து வருகிறது. முற்காலத்தில் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகப்படியாக இவற்றை மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளதாக பல வரலாற்று கூற்றுகள் மூலம் அறியப்படுகிறது. அருமருந்தாக திகழும் இந்த இரண்டின் கலவையும் சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என கூறப்படுகிறது…

தனித்தனியாக தோல் உரித்து எடுக்கப்பட்ட பூண்டு- 20.

தூய்மையான தேன் – ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)

201704051441377237 Garlic soaked in honey benefits SECVPF

பூண்டை ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நண்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது.

இந்த தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

க்ரில் சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?

nathan

குப்பை என தூக்கி எறியும் இந்த இரண்டு பொருள்களில் இவ்வளவு நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பாடி பில்டர் போன்ற உடற்கட்டு பெற எப்படி உணவுப் பழக்கம் பின்பற்ற வேண்டும்!!!

nathan

குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாகும் பேரிக்காய்

nathan

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

ஆண்கள் கட்டாயம் இந்த 10 விஷயங்களுக்காக கற்றாழையை சாப்பிடவேண்டும் தெரியுமா?

nathan

சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா?

nathan

diet tips obese kids – குழந்தை குண்டா இருக்கா? இந்த டயட்டை பின்பற்றுங்களேன்!!!

nathan