என்னென்ன தேவை?
தோசை/இட்லி மாவு – 1 கப்,
துருவிய பனீர் – 1/4 கப்,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 2,
தக்காளி – 1,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன்,
மசாலா தூள்- 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
விரும்பினால் சர்க்கரை – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். இத்துடன் தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மசாலாதூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு மசிய வதக்கி, துருவிய பனீர், கொத்தமல்லித்தழை, கரம்மசாலா சேர்த்து நன்கு கலந்து, பின்பு ஆறவைத்துக் கொள்ளவும். ஆறிய பின், தோசை/இட்லி மாவுடன் கலந்து குழிப்பணியாரக் கல்லில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.