34.1 C
Chennai
Monday, Jul 28, 2025
201704010901149841 how to make nungu rose milk SECVPF
பழரச வகைகள்

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

கோடை வெயிலுக்கு நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு குளுகுளு என இதமாக இருக்கும். இன்று நுங்கும் பாலும் சேர்த்து அருமையான பானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்
தேவையான பொருட்கள் :

இளம் நுங்குச் சுளைகள் – 5,
தேன் – 3 டீஸ்பூன்,
ரோஸ் சிரப் – 1 டீஸ்பூன்,
பால் – முக்கால் கப்,
சாரைப் பருப்பு அல்லது பிஸ்தா பருப்பு – கால் டீஸ்பூன்,
நெய் – அரை டீஸ்பூன்.
ஐஸ்கட்டிகள் – தேவைக்கு

201704010901149841 how to make nungu rose milk SECVPF
செய்முறை :

* நுங்கின் தோலை நீக்கி மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

* வாணலியில் நெய்யை சூடு செய்து, சாரைப்பருப்பை வறுத்தெடுக்கவும்.

* பாலைக் காய்ச்சி ஆறவைக்கவும்.

* காய்ச்சி, ஆறிய பாலில் தேன், ரோஸ் சிரப், அரைத்த நுங்கு, வறுத்த பருப்பு, ஐஸ்கட்டிகள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

* குளுகுளு நுங்கு ரோஸ்மில்க் ரெடி.

* குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அருந்தினால் சுவை கூடுதலாக இருக்கும். கோடைக்கு இதமாக நுங்கும் பாலும் சேர்ந்த அருமையான பானம் இது.

Related posts

ஜில்ஜில் மாம்பழ ஜுஸ் செய்வது எப்படி

nathan

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

sangika

மாம்பழ லஸ்ஸி

nathan

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

பாதாம் கீர்

nathan

குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

nathan

கோடையில் குளுகுளு கிவி – புதினா ஜூஸ்

nathan

வாழைப்பழ லஸ்ஸி

nathan