29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

வேர்க்கடலை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்

வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டு வருவதால் ஆண்மை அதிகரிக்கும்.

வேர்க்கடலை எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கரைத்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலையை போக்கி சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்குவதாக அமையும். மேலும் மலச்சிக்கலை உடைத்து மிகத் தாராளமாக மலத்தை சுத்திகரிக்கச் செய்யும். ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை எண்ணெய் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் பால்வினை நோயான கொனேரியா என்னும் ஒழுக்கு நோய் குணமாகும்.

சீனமக்கள் கடலை எண்ணெயை கொனேரியா நோய்க்கும், மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி ஆகியனவற்றுக்கும் தூக்கமின்மைக்கும் பயன் படுத்துகின்றனர். வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்துவம் அதிகமாக வதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் விட்ட மின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அடங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு போதிய சத்துவங்கள் கிடைக்கிறது என்பதால் வேர்க்கடலை உண்ணும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்வது நமக்கு ஆரோக்கியம் தரும்.

Related posts

கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மன அழுத்தம் வரும்: எச்சரிக்கை ரிப்போர்ட்

nathan

முருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும்.

nathan

காளானை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லதா? தெரிந்துகொள்வோமா?

nathan

பாக்கெட் உணவுகளைவிட மண் மணம் மாறா உணவுகள் ஏன் சிறந்தவை?

nathan

பனங்கிழங்கு ரொம்ப பிடிக்குமா?அப்ப இத படிங்க!

nathan

தெரிந்துகொள்வோமா? கொரோனா பாதித்தவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது!

nathan

சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்ற தாமரை உணவுகள்

nathan

சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

nathan

உங்களுக்கு தெரியுமா பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan