201703151520517864 bread dry fruits burfi SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி

டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி
தேவையான பொருட்கள் :

ஃப்ரெஷ் பிரட் தூள் – 2 கப்,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/2 கப்,
நெய் – 4 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் – சில துளிகள்,
வெள்ளித் தாள் – சில,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
உடைத்த நட்ஸ், விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் – 3/4 கப்,
திராட்சை, பொடித்த செர்ரி பழங்கள் – தேவைக்கு,
பால் – 1 கப்.

செய்முறை :

* வெறும் கடாயில் நட்ஸ், உலர்ந்த பழங்கள், விதைகள் அனைத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்துக் கொள்ளலாம்.

* பாலில் பிரட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

* ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் நெய்யை விட்டு சூடாக்கி பிரட் விழுதை சேர்த்து கிளறவும்.

* நன்கு சுருண்டு வரும் போது தேவையானால் சிறிது நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கும்.

* அடுத்து அதில் சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும்.

* துருவிய தேங்காய், ரோஸ் எசென்ஸ் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.

* பர்ஃபி கலவை திக்கான பதம் வந்தவுடன் அதில் உலர்ந்த பழங்கள், நட்ஸ், விதைகள் சேர்க்கவும். கொஞ்சம் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும்.

* கடைசியாக ஏலக்காய் தூளை தூவி நன்றாக கலந்து இறக்கவும்.

* பர்ஃபி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும்.

* ஆறியதும் வெள்ளி சரிகையை அதில் இட்டு, மீதி உள்ள நட்ஸை தூவி துண்டுகள் போட்டு பரிமாறவும்.

* பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி ரெடி.

* இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். 201703151520517864 bread dry fruits burfi SECVPF

Related posts

கோதுமை – கேழ்வரகு உருண்டை

nathan

வயதானவர்களுக்கான கோதுமை மாவு புட்டு

nathan

சுவையான வெங்காய பொடி தோசை

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

இறாலில் செய்திடலாம் பஜ்ஜி…!!

nathan

சுவையான உப்பு சீடை

nathan

பேபி கார்ன் ப்ரை

nathan

இஞ்சி – பூண்டுத் துவையல்tamil samayal recipe

nathan

சுவையான ஸ்நாக்ஸ் கோதுமை மாவு தட்டை

nathan