அசைவ வகைகள்

அயிரை மீன் குழம்பு செய்ய தெரியுமா…?

தேவையான பொருட்கள்:

அயிரை மீன் – அரை கிலோ
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 6 பல்
புளி – 25 கிராம்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தேங்காய்ப் பால் – அரை தம்ளர்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெந்தயம் போட்டுத் தாளியுங்கள். அதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு போட்டு நன்றாக வதக்குங்கள். அதில் தக்காளியை விழுதாக அரைத்துச் சேருங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்து, பொன்னிறமாகும்வரை வதக்குங்கள்.

பிறகு புளியைக் கரைத்து ஊற்றி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்து பச்சை வாசனை போனதும் அயிரை மீன்களைப் போட்டு, ஐந்து நிமிடம் குறைந்த தீயில் கொதிக்கவிடுங்கள். பிறகு தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும்.1489400786 3325

Related posts

மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

nathan

சுவையான உடைத்த முட்டைக் குழம்பு

nathan

காரசாரமான ஆட்டு மூளை மசாலா

nathan

செட்டிநாட்டு வஞ்சிர மீன் குழம்பு

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா முட்டை குழம்பு

nathan

ஆட்டு குடல் சாப்பிடுவதால் ஏதேனும் நன்மைகள் உண்டா?

nathan

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan