மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை
தேவையான பொருட்கள் :
சிக்கன் – அரை கிலோ
வெங்காயம் – 1 (1/2 + 1/2)
ப.மிளகாய் – 4
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம்மசாலாதூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகு தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
அரைக்க :
தனியா – 1 ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
பூண்டு – 5 பல் பெரியது
இஞ்சி – 1 துண்டு
வெங்காயம் – 1/2 (பாதி)
செய்முறை :
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
* சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவி வைக்கவும்.
* கொத்தமல்லி, பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊற விடவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதிஉள்ள பாதி வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் அரைத்த விழுதினை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
* அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கிய பிறகு, ஊறவைத்துள்ள சிக்கனை போட்டு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* சிக்கன் நன்றாக வெந்தவுடன் மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.
* சுவையான எளிதில் செய்யக்கூடிய ஆந்திரா மசாலா சிக்கன் பிரை ரெடி.
* இதை சாதம், பிரியாணி போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.