31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அசைவ வகைகள்

நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

நெத்திலி மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

நெத்திலி மீன் – 1/2 கிலோ
சிறிய வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 சிறிய துண்டு
பூண்டு – 10 பல்
தேங்காய் பால் – அரை டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு

செய்முறை :

* மீனை சுத்தம் செய்து லேசாக உப்பு, மஞ்சள் தூவி கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* புளியை கரைத்து வைக்கவும்.

* இஞ்சியை விழுதாக அரைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சோம்பு தாளித்த பினி நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கிய பின கரைத்த புளியை ஊற்றவும்.

* அடுத்து அதில் உப்பு, மஞ்சள், மிளகாய், தனியா தூள்களை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்.

* அடுத்து தேங்காய் பாலை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விட்டு மீனை சேர்க்கவும்.

* மீனை சேர்த்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். மீன் 2 அல்லது 3 கொதியில் வெந்து விடும். குழம்பை இறக்கும் முன் ஒரு சிறிய வெங்காயத்தை தோலுடன் அதில் தட்டி போட்டு அடுப்பில் இருந்து இறக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

* நெத்திலி மீன் குழம்பு ரெடி.

Related posts

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி

nathan

முட்டை தோசை

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan

மட்டன் குருமா

nathan

கிராமத்துக் கோழிக் குழம்பு (village chicken kuzhambu)

nathan

எலுமிச்சை இறால் கிரேவி செய்வது எப்படி

nathan

சிவையான நாட்டுக்கோழி வறுவல்

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan