29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
அசைவ வகைகள்

சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

முட்டை புர்ஜி சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டையுடன் பன்னீர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி
தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
சோம்பு – சிறிதளவு
வெண்ணெய் – சிறிதளவு
பன்னீர் – 200 கிராம்
உப்பு – சுவைக்கு
முட்டை – 3 (வெள்ளைக்கரு மட்டும்)
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பன்னீரை துருவிக்கொள்ளவும்.

* ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகியவுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* இரண்டும் நன்றாக வதங்கிய பின் துருவிய பன்னீர் சேர்க்கவும்.

* அடுத்து அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

* பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

* சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி ரெடி.

Related posts

காடை முட்டை குழம்பு

nathan

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

sangika

வெங்காயம் சிக்கன் ஃப்ரை

nathan

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

nathan

தலபாக்கட்டி மட்டன் பிரியாணி: சுலபமான முறை

nathan

சுவையான திருக்கை மீன் குழம்பு

nathan

முட்டை சில்லி

nathan

மசாலா மீன் வறுவல்

nathan

கோழி ரசம்

nathan