29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
201701281355330813 women Please do not Glamorous promote dignity SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களே கவர்ச்சி வேண்டாம்.. கண்ணியம் காப்போம்..

பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.

பெண்களே கவர்ச்சி வேண்டாம்.. கண்ணியம் காப்போம்..
சமுதாயத்தில் ஆண் ஒரு காரியத்தை செய்து விட்டால், அதை ஒரு சம்பவமாக நினைத்து தாண்டி போகும் பட்சத்தில், ஒரு பெண் செய்யும் சின்ன தவறான காரியம் கூட, ஒரு வரலாறாக, ஒரு தலைமுறையின் பதிவாக பார்க்கும் சூழ்நிலை உள்ளது.

ஒரு பெண், தான் தனித்திறமை உள்ளவள், பல சாதனைகளை செய்ய முடிந்தவள், பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் படைத்தவள், தன் இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க தெரிந்தவள் என்பதை வெளிக்காட்ட, மற்றவர்கள் பாராட்டும்படி நடக்க, தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால், பெண்களின் தற்போதைய நிலையை, சமூக முன்னேற்றத்தில் அவர்களின் பங்கை ஆராய்ந்து பார்த்தால், திருப்திகரமானதாக இல்லை என்று தான் கூறத் தோன்றுகிறது.

எல்லா துறைகளிலும் பெண்கள் ஜெயித்து வரும் வேளையில், இது என்ன புதுக்கதை என்று கோபப்படக் கூடாது. நன்கு கூர்ந்து ஆராய்ந்தால், பெண்களின் மாறிய மனநிலையை புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலான பெண்கள், தங்களை முன்னிறுத்த, நான்கு பேர் பாராட்ட, கிரீடம் சூட்டிக் கொள்ள என, தங்களின் வெளிப்புற தோற்றத்திற்கே முக்கியத்துவம் தர முயல்கின்றனர்.

உடுத்தும் உடை, தற்போதைய பெண்களின் மூச்சாகவே மாறி விட்டது எனலாம். உடலை மறைக்கத்தான் உடை என்பதெல்லாம் பழங்கதை. உடலை வெளிச்சம் போட்டு காட்டத்தான், புதுப்புது நவ நாகரிக உடைகள் என்ற கட்டத்திற்கு வந்து விட்டோம்.

ஓர் உடை அழகாக இருக்கிறது என்பதே, அதை நாம் தேர்ந்தெடுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. அது, நம் உயரம், உடல் அமைப்பு, வயது, சமுதாயத்தில் நம் நிலை இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அமைய வேண்டும். ஆனால், இப்படியெல்லாம் யாரும் கவனம் கொண்டுள்ளதாய் தெரியவில்லை.

உடை என்பது, நம் சவுகரியத்திற்கு ஏற்ப, கண்ணியமாகத்தான் இருக்கணுமே தவிர, உடையை வைத்து நம்மை விமர்சிக்கும்படி இருக்கக் கூடாது. கண்ணியமான உடை, மற்றவர்களை கவர்ந்து, சுண்டி இழுக்காத உடை, நாகரிகமான முறையில் அணிந்தாலே, கம்பீரம் தானாகவே வந்துவிடும். படிக்கும் பருவ வயதில், தன் எதிர்காலம் பற்றிய லட்சியத்தோடு நடைபோடும் இளம் பெண்கள் எத்தனை பேர், இதை கவனத்தில் கொண்டுள்ளனர்?

நடுத்தர வயது பெண்களுக்கே இதைப் பற்றிய தெளிவு இல்லை. உடை, சிகை, முக அலங்காரம் அனைத்தும், ஆண்களின் பார்வைக்காக என்பதில் கவனம் செலுத்துவதால், பெண்கள், தங்களின் இலக்கு என்ன என்பதையே தீர்மானிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். பின் எங்கிருந்து பெண்கள் சமுதாயம் முன்னேற்றம் காணும்?

பெண்கள், தங்களுக்கான வழியை விரிவுபடுத்திக் கொண்டு போகும்போது, பாலியல் தொந்தரவு போன்ற சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனியாக ‘டூவீலர்’ ஓட்டும் பெண்ணை, சமூகம் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்த நிலை, இன்று இல்லை.

மற்றவர்கள் நம் உடை அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கலாம்; ஆனால், ருசிக்கவும் வேண்டும் என்ற எண்ணம், ஆண்கள் மனதில் ஏற்படா வண்ணம் நடப்பது, நம் கடமை தானே!201701281355330813 women Please do not Glamorous promote dignity SECVPF

Related posts

நீங்கள் உடைத்தெறிய வேண்டிய 13 கெட்ட பழக்கங்கள்!

nathan

இந்த 7 விஷயங்கள் தெரிஞ்சால் போதும்… சர்க்கரை நோய்க்கே சவால் விடலாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ சில வழிகள்! அசிடிட்டி பிரச்சினையால் பெரும் அவதியா?

nathan

நக சுத்தியை குணப்படுத்த இதோ எளிய பாட்டி வைத்திய முறைகள்..!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா உள்ளாடை அணியும்போது நீங்க செய்யும் இந்த தவறுகள்?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…முருங்கை பூவின் மருத்துவ மகிமை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகுப் பயன்பாட்டில் துலுக்கச் சாமந்தி செய்யும் சில அற்புதங்கள்!!!

nathan

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்றை எப்படி தவிர்க்கலாம்?

nathan

இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் செய்ய கூடியவை… செய்ய கூடாதவை

nathan