மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…விளையாட்டுக்களினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதா?

கருவுறும் போது ஒருவர் தன்னுடைய உடலில் அதிகப்படியான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதை நமது குடும்பத்தில் புதிதாக சேரப்போகும் நபருக்காக செய்ய வேண்டும்.

கருச்சிதைவு என்பது வாழ்வின் மிகக் கொடுரமான நிகழ்வாகும். இதை எந்த பெண்ணாலும் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் வாழ்வின் ஆதாரமே இல்லாமல் மிகவும் தன்னம்பிக்கை இழந்த நிலையில் இருப்பவர்களை நாம் பார்த்திருப்போம். கரு உருவாகும் போதே கலைவதையும் மற்றும் சில மாதங்களுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது போன்றவற்றை நாம் பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்கள் உண்டு. எப்படி இருந்தாலும் அந்த குடும்பத்தின் நிலையையும், முக்கியமாக அந்த தாயின் மன நிலைமையையும் நம்மால் யூகிக்கவே முடியாது.

இத்தகைய கருச்சிதைவு விளையாடுவதால் ஏற்படுமா என்ற எண்ணம் நிறைய பெண்களிடம் ஏற்படலாம். விளையாட்டு நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு கருவியாகும். இதை கர்ப்ப காலத்திலும் செய்யலாம், ஆனால் நாம் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஆனால் எதை எல்லாம் விளையாட வேண்டும் என்பது அடுத்த சந்தேகமாக இருக்கும்.

நாம் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை இந்த சமயத்தில் முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை அவர்களின் கர்ப்பக் காலத்தில் முழுவதும் செய்யாமல் இருப்பது நல்லது. எத்தகைய விளையாட்டுக்களை விளையாடலாம், எதை எல்லாம் தவிர்க்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

நீச்சல் : மெதுவாகவும் நிதானமாகவும் விளையாட விரும்பும் பெண்களுக்கு பெண்களுக்கு நீச்சல் ஒரு சிறந்த விளையாட்டு கலந்த உடற்பயிற்சியாகும். கர்ப்ப காலத்தில் இதை நாம் பயிற்சி செய்வது கேடு விளைவிக்காது. ஆனால் அதிக நேரம் தண்ணீரில் இருத்தல் மற்றும் மூச்சை அதிக நேரம் இழுத்துப் பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நம்மை நாமே கடினப்படுத்திக் கொள்ளக் கூடாது.

வெளி விளையாட்டுகள்

வெளி விளையாட்டுகளை நிறைய பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் கர்ப்ப காலத்தில் கூட அவற்றை விளையாட ஆசைப்படுகின்றனர். இதோ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இதை விளையாடுவதால் எந்த வித கருச்சிதைவும் ஏற்படுவது கிடையாது. ஆனால் நம்மை நாம் எப்போம் பத்திரமாகவும் கடினமாக செயல்களை செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஓடுதல்

ஜாக்கிங் கர்ப்ப காலத்தில் மிக உகந்த விளையாட்டுப் பயிற்சியாகும். மருத்துவ ரீரியாக இதற்கு எந்த வித தடைகளும் இல்லை என்ற உறுதி இருந்தால் நிச்சயம் ஜாக்கிங் செய்யலாம். நிதானமாகவும் தேவையான அளவும் ஜாக்கிங் செய்வது எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனினும், நாம் இதை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.

பேட் வைத்து விளையாடுதல்

டென்னிஸ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகள் மிகவும் பாதுகாப்பான விளையாட்டுகளாகும். எந்த விளையாட்டாக இருந்தாலும் கவனமாக இருப்பது அவசியம். மிகவம் தீவிரமாகவும் விளையாடுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.

சேர்ந்து விளையாடுதல்

கால் பந்து, கைப்பந்து, ஆகிய நிறைய நபர்களுடன் விளையாடும் விளையாட்டுகளை தவிர்கக வேண்டும். இது சிறிதே அபாயமானதாகும். நாம் கவனமாக இருந்தாலும் நம்முடன் விளையாடுபவர்கள் நம்மை தள்ளி விட்டு அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடக்க நேரும். ஆகையால் இத்தகைய விளையாட்டுகளை நாம் தவிர்ப்பது நல்லது.

அதிக எடை உள்ள பொருட்களை தூக்குதல்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இத்தகைய விளையாட்டுகளை செய்யவே கூடாது. இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விளையாட்டுகளாகும். இவை நிச்சயம் கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடியவைகளாகும்.

சாகச விளையாட்டுக்கள்

டைவிங், பாராசூட்டிங், மார்சியல் ஆர்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதை கர்ப்பமாக இருக்கும் எந்த காலத்திலும் பயிற்சி செய்யக்கூடாது.

இத்தகைய விளையாட்டுகளை செய்வது நமது உடலின் ஆரோக்கியத்திற்கா அல்லது கேடு விளைவிப்பதற்கா என்று யோசித்து செயல்படுவது நல்லது. எப்போதும் நமது கருவின் தன்மை என்னவென்று ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button