30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
மருத்துவ குறிப்பு

இது தான் செய்யவேண்டும்.! மனித உடலின் முக்கிய பாகத்தை காக்க

மனித உடலிலேயே கல்லீரல் தான் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகப்படியான மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறையிலான பாட்டி வைத்தியங்களை எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சள்ஒரு கிருமி நாசினி என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மேலும் தினமும் பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமடையும்.

முள்ளங்கியை நீரில் போட்டு சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.

தினசரி ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சுத்தம் செய்யும்.

இஞ்சியை தினசரி உணவு சேர்த்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும்.

கிரீன் டீயை தினசரி உணவிற்கு முன்பு குடித்து வந்தால் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரலை சுத்தம் செய்யும்.

Related posts

இரவில் தூக்கம் இல்லாமல் புரண்டு தவிப்பவர்களுக்கு டிப்ஸ்

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள்ல ஏதாவது இருக்கா?அப்ப கண்டிப்பாக வாசியுங்க….

nathan

வெங்காயம் – பாதம் வைத்தியம்…!

nathan

இதயநோய்க்கு குட்பை சொல்லனுமா? இதை மட்டும் செய்தாலே போதும்

nathan

‘ரான்சம்’ இணையத் தாக்குதல் – அமெரிக்க பாதுகாப்பு துறையின் அசட்டையா ?

nathan

பெண்ணின் கரு முட்டை பற்றிய விளக்கம்…

nathan

பல் கூச்சத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்கள் கவனத்துக்கு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுபவரா நீங்கள்?

nathan

தெரிஞ்சிக்கங்க…நிமோனியாவால் கஷ்டப்படுறீங்களா? சீக்கிரம் குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க…

nathan