27.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
201612200955145574 Efficient methods of saving money SECVPF1
மருத்துவ குறிப்பு

சிக்கனமாக பணம் சேமிக்கும் வழிமுறைகள்

சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

சிக்கனமாக பணம் சேமிக்கும் வழிமுறைகள்
இன்றைய காலத்தில் மனிதர்கள் பணத்தை குருவி சேர்ப்பதுபோல கொஞ்சம், கொஞ்சமாக சேமித்தாலும், அவ்வப்போது வாழ்வில் வரும் காலச் சுனாமி அத்தனையையும் கரைத்து காலியாக்கி விட்டுச்செல்கிறது. இளமையில் ஓடியாடி வேலை பார்க்கிறார்கள். வயதாகிய காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறார்கள். அதற்கு காரணம் எங்கேயோ செல்வத்தை கோட்டை விட்டிருக்கிறோம் என்பதுதான். இந்த வேதனையை தவிர்க்க இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாம்.

சிறுதுளி பெருவெள்ளம்

சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும். முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும்.

சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி. வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் சிறுதொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது சிறுதுளி பெருவெள்ளம் எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும். சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் உங்களின் நோக்கம் எளிமையாக நிறைவேறும். அது மேலும் சேமிக்கும் ஆவலைத்தூண்டும்.

முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியம். எனவே காலத்தை ஒத்திபோடாமல் அந்த சிந்தனை தோன்றிய இக்கணமே சேமிப்பை ஆரம்பியுங்கள். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் ‘பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

பணம் சேமிக்கலாம்

பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு மூலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்துவிடலாம். பின்னாளில் நீங்கள் மனநிம்மதியுடன் வாழ, இப்போதே நீங்கள் வீட்டுச் செலவை எழுத வேண்டும். நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்தால் இன்றிலிருந்தாவது வரவு செலவை குறிக்க பழகுங்கள். வாழ்வெனும் போர்க்களத்தில் திடீர் பணத் தேவைகள் உங்களை சூழ்நிலைக் கைதியாக்கலாம். அப்போது மற்றவர்களை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக தவிக்கும் நிலைமையை இது தடுக்கும்.

மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக்கூடாது. ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையைவிடக் குறைவாக இருக்கும். பழமையில் பெருமை காண விரும்பினால் புதுமையாக பணம் சேமிக்கலாம். ஆமாம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை செகண்ட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும். 201612200955145574 Efficient methods of saving money SECVPF

Related posts

தெரிந்துகொள்வோமா? பற்களின் ஈறுகளில் ஏற்படும் தொற்றுக்களை தடுப்பதற்கான இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

மாலை அல்லது இரவில் கர்ப்ப பரிசோதனை செய்யலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது? தடுக்கும் வழிமுறைகள்

nathan

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

மனித மூளைக்குள் நிகழும் அதிசயம்

nathan

பர்சனல் லோன்… சுமையைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

குறைப்பிரசவத்தில பிறந்த குழந்தையை எப்படி பார்த்துக்கணும் தெரிஞ்சுக்கோங்க.

nathan

அதிகாலையில் வேகமாக எழுவதற்கான சில வழிகள்!!!

nathan

முட்டை சைவமா? அசைவமா? நீண்ட நாள் கேள்விக்கான விடையை கண்டுபிடிச்சாச்சு!அப்ப இத படிங்க!

nathan