36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

வாயுத் தொல்லைக்கு எளிய இயற்கை மருத்துவம்

இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச் சுத்தம் இல்லாமல் இருந்தாலும், நாள்பட்ட வயிற்றுப் புண், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், நேரம் தவறிச் சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது, உணவுப் பழக்கவழக்கம், மன உளைச்சல் இருந்தாலும், பொரித்த உணவு, எண்ணெய், நெய், இனிப்பு, கார வகைப் பலகாரங்களை உண்பது, மது, புகைப்பழக்கம் இருந்தாலும் மேற்கண்ட வாயுத் தொல்லை, உடலின் பல பகுதிகளில் தசைப்பிடிப்பாக வெளிப்பட வாய்ப்புள்ளது.

வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வாய் முதல் ஆசனவாய்வரை உள்ள உணவுப் பாதையை முழுமையாகச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்துக்குச் சத்தான அறுசுவை உணவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரை (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம், சீனி கலந்தது) வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு மாத்திரை ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி லேகியம், அஸ்வகந்தி லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் ஆகாரத்துக்குப் பிறகு சாப்பிடலாம். ஓமத் தீநீர் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் 10 மி.லி. சாப்பிடலாம்.

Related posts

சிசேரியன் பிரசவம் எனில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்குமா?

nathan

அல்சருக்கு தீர்வு தரும் நாட்டு மருந்துகள்!

nathan

பற்கள் அசிங்கமாக இருப்பதற்கு உங்களது இந்த செயல்கள் தான் காரணம் என்பது தெரியுமா?

nathan

வாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகையை முறையில் 1 மண்டலம் சாப்பிட்டு வந்தால் நோய் என்னும் காலன் நெருங்காது!

nathan

துப்பட்டாவே ஆயுதம் ஆகும்!

nathan

கர்ப்பம் அடைவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க வழிகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கருத்தரிப்பு மற்றும் கருவுறுதல் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

nathan

தெரிந்துகொள்வோமா? மூக்கு, தொண்டை பகுதி வரை சென்ற வைரஸை வெளியேற்றுவது எப்படி?

nathan